இலங்கையின் பல்வேறு பிரதேசங்களை சேர்ந்த சுமார் ஐம்பதுக்கு மேற்பட்டோர் மூன்று நான்கு இலங்கை போலி ஹஜ் முகவர்களால் அநாதரவாக கைவிடப்பட்டு பெரும் சீரழிவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் மரணம் ...
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது..
சில முகவர்கள் ஹஜ்ஜுக்காக ஹாஜிகளிடம் பெருந்தொகை பணத்தை அறவிட்டு அதுவும் VIP சலுகை என்று கூறி வயதானவர்களும் கர்பிணிதாய்மாரும் , நோயாளிக்களுமாக ஐம்பதுக்கு மேட்டோர் இவர்களிடம் பணத்தை கொடுத்து பயணத்தை மேற்கொண்டனர்.
வந்து சிலநாட்களில் சொல்லப்பட்டதற்கு மாற்றமாக சாதாரண தங்குமிடவசதிகளை செய்து கொடுத்து .ஏமாற்றிய நிலையில் .மீனாவில் அவர்களுக்கென இரண்டாம் தர கூடாரத்தை கைய்யளித்து தங்கவைத்த நிலையில் மறுநாள் அத்தணை பேரையும் வாகனத்தில் கொண்டுபோய் அரபாவில் அநாதரவாக கைவிட்டு விட்டுவிட்டு இந்த முகவர்கள் பணத்தை மிச்சம் பிடிக்கும் நோக்குடன் அனைவரும் மாயமாகிவிட்டனர் .
ஹாஜிகள் உணவின்றி செய்வதறியாது பாரம் பொருந்திய பொதிகளுடன் மக்ரிபை நெருங்கிய வேலை முத்ஷரிபாவுக்கு செல்லவேண்டியது கடமையான நிலையில் ..
சிறிதளவும் நடக்கமுடியாத நோய்வாய்ப்பட்டிருந்த இவர்கள் ஒரு சன நெருக்கம் உள்ள பேருந்தில் பெருந்தொகை பணத்தை கொடுத்து கூரைக்குமேல் அமர்த்தப்பட்டு முஸ்தளிபாவில் கொண்டுவிடப்பட்டு வழிகாட்டுதல் ஏதும் இல்லாமல் பாதையில் ஒரு ஓரமாக இரவை கழித்துள்ளனர் ..
அடுத்தநாள் காலயிலேயே பசியுடன் மக்களோடு மக்களாக ஆறு ஏழு மணித்தியாலங்கள் நடந்து செல்கையில் இரு பிரிவினராக வழி தவறி செல்கையில் அதில் ஒரு பகுதியினர் எப்படியோ அல்லாஹ்வின் உதவியால் கூடாரத்தை சென்றடைந்துள்ளனர்.
(அல்லாஹ் இப்படியும் நாடியிருக்கின்றான் பாருங்கள்) மற்றோர் அணி பசியுடனும் தாகத்துடனும் ஆறு மணித்தியாலம் வாகனமின்றி நடைபயணமாக வந்து மீனாவில் ஒரு மரத்தடியில் பசியுடன் இளைப்பாருகையில் . சிறிது நேரத்துக்கு பிறகு புத்தளத்தை சேர்ந்த ஒரு சகோதரர் ஒருவர் .60 நோம்பர் தொண்டு நிறுவனத்தில் பணிபுரிபவர் தாய் மொழி பேசும் சத்தத்தை கேட்டு ஜன்னலால் எட்டிப்பார்துள்ளார் .
இவர்களின் துயரறிந்து உடனேயே வெளியில் மற்றும் எல்லா ஊழியர்களுடன் இவர்களை அணுகி தேவையான உணவு வசதிகளை செய்துகொடுத்து பசியாற்றியுள்ளனர் .
ஹாஜி உறவுகள் இவர்களுக்கு நடந்த கொடுமையை சொல்லி அனைவரும் கண்ணீர்விட்டு நன்றியும் தெரிவித்துள்ளனர் .
பிறகு நடந்தவற்றை ஸ்டேட்மன்ட் எழுதி எடுத்து இவர்களின் கூடாரத்தை தேடிப்பிடித்து சென்று பார்க்கையில் அங்கிருந்தவர்களும் இவர்களை கண்டு கட்டிப்பிடுத்து கண்ணீர்விட்டு நடந்தவற்றை கூறியுள்ளனர்.
இவர்களுடன் இருந்த மேலும் இருவர் காணாமல் போய் உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளனர் (பின்னைய செய்தி இதுவரையிலும் இருவரும் கண்டுபிடிக்கப்படவில்லை
மேலும் ஹாஜிகள் மீனா ஜமராத்தில் முகவர்களுக்கேதிராக பிரார்தித்ததாகவும மனவருத்தத்துடன் கூறினார் ..இந்தநிலையில்தான் தக்க கவனிப்பின்றி .ஒரு ஹாஜி நோய்வாய்ப்பட்டு இயற்கை எய்தினார்...
இன்னாளிள்ளாகி வ இன்னா இழைகி ராஜிவூன்
இப்படிப்பட்ட போலி ஹஜ் முகவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி பாதிக்கப்பட்டோருக்கு அவர்களிடம் இருந்து இழப்பீடை பெற்றுக்கொடுத்து அவர்களை சட்டரீதியாக தண்டிக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட ஹாஜிகள் நாடு திரும்பியதும் இவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் பின்னைய செய்திகளில் அறிய முடிகிறது ..
(இத்தகவல்கள் இலங்கை முஸ்லிம் கலச்சார அமைச்சினால் ஹாஜிகளுக்கு சேவை செய்ய அனுப்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியரினால் உறுதி செய்யபட்டது)
ஆகவே சகோதரர்களே இயன்ற அளவு அல்லாஹ்வுக்காக இதை பகிரவும் ..
தொகுப்பு :
