Wednesday, September 16, 2015

UN மனித உரிமைகள் ஆணையாளா் அறிக்கை வெளியீடு: சர்வதேச விசாரணை கட்டாயம்.

இலங்கை தொடர்பிலான விசாரணை அறிக்கை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகத்தினால் சற்று முன்னர் வெளியிடப்பட்டது.
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம் என அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக விசாரணை அறிக்கையை வெளியிட்டு உரையாற்றிய ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விசாரணையின் பொருட்டு இலங்கை மற்றும் சர்வதேசம் இணைந்த நீதிமன்ற கட்டமைப்பொன்றை ஸ்தாபிக்க வேண்டும் என அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
உள்ளக விசாரணையை நடத்துவதற்காக இலங்கை இன்னும் தயாராகவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இறுதிக்கட்ட யுத்தம் இடம்பெற்ற போது இரண்டு தரப்பினரும் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதை இந்த அறிக்கை உறுதிப்படுத்துவதாகவும் செயிட் அல் ஹூசைன் குறிப்பிட்டுள்ளார்.
மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பி|ரேரணைக்கு அமைய ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர், மாட்டி அத்திசாரியின் தலைமையில் குழுவொன்றை நியமித்து இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Disqus Comments