Thursday, October 1, 2015

இலங்கையின் சனத்தொகையில் 46% ஆண்கள்! 54% பெண்கள்!! பெண்கள் 18 இலட்சம் அதிகம்.!!!

இலங்கையில் பெண்களின் சனத்தொகை வெகுவாக உயர்வு அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆண்களை விடவும் இலங்கையில் 18 லட்சம் பெண்கள் வாழ்ந்து வருவதாக கொழும்பு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

நாட்டில் ஆண்களை விடவும் 18,17000 பெண்கள் வாழ்ந்து வருவதாகவும் இது ஓர் பாரிய சமூகப் பிரச்சினை எனவும் கொழும்பு பல்கலைக்கழகத்தின மானுட வள அபிவிருத்தி நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 46 வீதமானவர்கள் ஆண்களாகும்.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 1,04,45,000 ஆண்களும், 1,22,62,000 பெண்களும் வாழ்ந்து வருகின்றனர்.

ஆண்களை விடவும் பெண்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளமை பல்வேறு சமூகப் பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம் செய்தல், தொழில் வாய்ப்பு பெற்றுக் கொள்ளல், குடும்ப பிணக்குகள், உளவியல் அழுத்தங்கள் என பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதாகத் தெரிவித்துள்ளது.

இலங்கையில் பெண்களின் ஆயுட் காலம் அதிகரித்துள்ளது.

மது, போதைப் பொருள் மற்றும் புகையிலை உற்பத்திப் பொருள் பயன்பாடு, இருதய நோய், நீரிழிவு போன்ற நோய்களினாலும் ஆண்கள் உயிரிழக்கின்றனர் என கொழும்புப் பல்கலைக்கழக ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.
Disqus Comments