Saturday, March 26, 2016

புகைப் பிடிப்பவரா நீங்கள். அப்படியாயின் எச்சரிக்கைப் பதிவு.

புகைப்பிடித்தல் என்பது பொதுப்பழக்கமாகி இன்று பெருவாரியாகப் பரவிவரும் ஒரு பழக்கமாகிவிட்டது. சிறுவர்கள் கூட இப்பழக்கத்திற்கு அடிமையாகி விடுகின்றனர். புகைத்தலுக்கு அருகாமையில் புகைக்காமல் இருப்பவர்களையே பாதிக்கச் செய்கிறது இந்தப் புகைத்தல்.

புகைப்பிடிப்பதால் ஏற்படும் விளைவுகள்?

*முடி நிறமாற்றம் அடைகிறது.(hair color change)

296957_120619132644_smoking-diseases

*மூளையானது புகைத்தலுக்கு அடிமையாகிறது.

*எப்போதும் புகைக்கவேண்டும் என்ற எண்ணத்தை வரவழைக்கும் நிலைக்கு மாறுவது.

*காண்பார்வை குறைபாடுகள் ஆரம்பிக்கும். காட்ராக்ட் (cataracts) போன்றவை..

*மூக்குக்குக்கூட பாதிப்புத்தான்.. மணங்கள் நுகர்ச்சித்தன்மை குறைதல்.

*தோல் சுருங்கிப்போகும்(Wrinkle). இளவயதிலேயே வயதான தோற்றத்தை அடைதல்.

*பற்களின் நிறமாற்றம், பல்லின் மேற்புறத்தில் ஏற்படும் அழற்சி(Gingivitis) போன்றவை.

*வாய் மற்றும் தொண்டை பாதிப்புகள். உதாரணமாக உதடுகளின் வடு உண்டாவது, உணவுப் பாதை
மற்றும் தொண்டை புற்றுநோய், சுவை நுகர்ச்சி குறைதல், துர்நாற்றம் (கெட்ட வாசனை.)

*ரத்த ஓட்டம் குறைவதால் கைகால்கள் செயலிழக்கும் தன்மை.

*இரத்தத்தில் நிகோடின் படிவுகள் சேர்தல்.

*நுரையீரல் தொற்று நோய்கள், சுவாசப்பை புற்று நோய். நாட்பட்ட சுவாச அடைப்பு நோய்
(COPD), சுவாசப்பைத் தொற்று (Pneumonia) ஆஸ்துமா போன்றவை

*மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு.(Heart attack)

*ஈரல் புற்று நோய் வரலாம்.

*இப்பழக்கம் வயிற்றை விட்டுவைப்பதில். நாளடைவில் அல்சர், குடல், இரப்பை, சதை புற்றுநோய், நாடி வெடிப்பு (Aneurysm) போன்றவையும் ஏற்படும்.

*சிறுநீரகப் புற்று நோய்(Kidney cancer), சிறு நீர்ப் பை புற்று நோய் ஏற்படலாம்.

*எலும்பின் உறுதி குறைந்து வலுவிழத்தல். இதனால் எலும்பு முறிவு(Fracture) ஏற்படும்
அபாயம்.

*இனப்பெருக்கத் தொகுதி பாதிக்கப்படுதல், உதாரணமாக விந்தணுக்களின் வீரியம் குறைதல், ஆணுறுப்பின் விறைப்புத் தன்மை குறைதல், குழந்தையின்மை(Childlessness) போன்றவை.

*இரத்தத்தில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைதல், இரத்தப்புற்று நோய்(Blood Cancer), இதனால் விரைவில் நோய்வாய்ப்படும் தன்மை உண்டாகுதல். கால்கள் வலுவிழந்து, உறுதிச் சுற்றோட்டம் குறைந்து கால் பகுதியில் காயம் ஏற்படல்.இன்னும் பல எதிர் விளைவுகளை புகைத்தல் ஏற்படுத்தும்.

இதைப் படித்த பின்னர் புகைப்பழக்கத்தை நீங்கள் நிறுத்தி விட்டால் கீழே உள்ள அறிகுறிகள் ஆரம்பமாகும்…..


*புகைப் பிடித்தல் விடுவதால் ஏற்படும் நன்மைகள்?
*புகை பிடித்தல் நிறுத்திய ஒரு சில நாட்களுக்குள், உங்கள் சுகாதாரம்
குறிப்பிடும்படியான முன்னேற்றம் அடைந்ததனை உணர்வீர்கள்.
*நுரையீரல் செயற்பாடு  அதிகரித்து மற்றும்  பொதுவான உடற்பயிற்சி அளவுகள் வளர்ச்சி சேர்ந்து அதிகரிக்க இரத்த ஓட்டத்தில்  ஆக்சிஜன் 
அளவுகாரணமாக உடல் நலம் முன்னேற்றமடையும். 
*நிச்சயமாக சுவாசம் மிகவும் மேம்பட நுரையீரலில் மிகவும் அருமையாக (புகைக்கும் போது இருந்ததை விட)இயங்குகின்றன என்று கூறுவீர்கள். சளி,இருமல் இவைகள் இல்லாத ஆரோக்யமான வாழ்வு மலரும்
*மணம் மற்றும் சுவை  உணர்வு  மேம்படுத்திக்கொள்ள   சரியானநிலைக்கு திரும்ப சில நாட்கள் ஆகும். பின்பு பசி அதிகரிக்கவும் சுவை அறிய முடியும்.
*மாரடைப்பு ஆபத்து நீங்குகின்றது. பலபிரச்சினைகள், ஆபத்துக்களை குறைக்கும்.
* சகிப்பு தன்மைஅதிகரிக்கும் மற்றும் சில வாரங்களில்  நன்றாகதூங்கம் கிடைக்கும்.  இதனால் புத்துணர்வு ஏற்பட்டு மன மகிழ்வுடன்  வாழ்வீர்கள்.

Disqus Comments