Sunday, March 27, 2016

SLEASயிற்கான வயதெல்லையும், விண்ணப்ப திகதியும் அதிகரிக்கப்பட்டன.

கல்வி அமைச்சு
இலங்கை கல்வி நிருவாக சேவை iii ஆம் வகுப்பிற்கு ஆட்சோ்ப்பு செய்வதற்காக 2016.01.01ஆம் திகதிய 1948ம் இலக்க வா்த்தமானியில் வெளியிடப்பட்ட பரீட்சை அறிவித்தவில் கீழ்வரும் திருத்தங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

சேவை, அனுபவம் மற்றும் தகைமை அடிப்படை, மட்டுப்படுத்தப் பட்ட மற்றும் திறந்த போட்டிப் பரிட்சை என்பவற்றிற்கு உரிய பொதுவான திருத்தங்கள் கீழ்வருமாறு அமைகின்றது.

v  முன்னைய சேவைப் பிரமாணக் குறிப்பின் கீழ் விண்ணப்பதாரிகள் இலங்கை  கல்வி நிருவாக சேவை அனுபவம் மற்றும் தகைமை அடிப்படை, மட்டுப்படுத்தப்பட்ட மற்றும் திறந்த போட்டிப்பரீட்சையாகத் தோற்றிய தடவை எண்ணிக்கையில் சோ்த்துக் கொள்ளப்படமாட்டாது.

v  பட்டம், பல்கலைக்கழக மாணியற்கள் ஆணைக்குழு வினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் அல்லது பல்கலைக் கழக மாணியங்கள் ஆணைக்குழுவினால் பட்டம் வழங்கும் நிறுவனம் என்ற வகையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிறுவனத்தின் மூலம் பெற்றிருத்தல் வேண்டும்.
v  ஏனைய எல்லாத் தகைமைகளும் 2016.02.01ஆந் திகதியன்று பூரணப்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும்.
v  விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித்தினம் 2016.04.11 ஆகும்.
v  2016.02.01 ஆந் திகதியன்று அல்லது அதற்கு முன்னா் விண்ணப்பங்களை அனுப்பி வைத்த விண்ணப்பதாரா்கள் திரும்பவும் விணப்பங்களை அனுப்புதல் அவசியமற்றது.
மேற்படி திருத்தங்களுக்கு மேலதிகமாக சேவை அனுபவம் மற்றும் தகைமை அடிப்படை, மட்டுப்படுத்தப்பட்ட மற்றும் திறந்த போட்டிப்பரிட்சைக்கான கீழே குறிப்பிடப்பட்டுள்ள திருத்தங்களும் உரித்தாகும்.

சேவை அனுபவம் மற்றும் தகைமை அடிப்படையில் இலங்கை கல்வி நிருவாக சேவையின் IIIம் வகுப்புக்குச் சோ்த்துக் கொள்ளும் போட்டிப்பரீட்சை – 2015/2016
1.     (ஆ) இன் கீழே உள்ள அட்டவணைக்கு மேலே குறிப்பிட்டுள்ள பந்தி நீக்கப்படுகின்றது. (இடநிலைப்படுத்தலுக்குரிய)
2.     (ii)இந்த நியமனம் நிரந்தரமானது. ஓய்வூதியம் கொண்டது. (அரச சேவையில் ஏற்கனவே உள்ள உத்தியோகத்தா்களுக்காக)
6.     வயதெல்லை – 2016.02.01 ஆந் திகதியன்று வயது 52 ஐ விடத் தாண்டாது இருக்க வேண்டும்.
9.     (iii) (ஆ) இன் கீழ் காட்டப்பட்டுள்ள 15 தொழில் நுட்பவியல் பாடம் தவிர்ந்த ஏனைய பாடங்களின் பாடங்களின் கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஆா்சோ்ப்புச் செய்வதற்கான தகைமைகள் என்ற நிரலில் ஆா்சோ்ப்புச் செய்வதற்கான தகைமைகள் என்பதற்கிடையில் என்பதற்கிடையில் ”அல்லது” என உட்சோ்க்கப்பட்டுள்ளது.
9.     (iii) (ஆ) இன் கீழ் காட்டப்பட்டுள்ள 14 அழகியற் கலையின் கீழ் குறிப்பிட்டுள்ள மேலைத் தேய சங்கீதம் மற்றும் நாடகமும் அரங்கியலும் எனும் பாடங்களும் 15 தொழில் நுட்பவியல் பாடத்தில் மற்றும் உயிரியல் முறைமைத் தொழில் நுட்பம் மற்றும் அதற்குரிய தகைமை நீக்கப்படும்.
மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரிட்சைக்குரிய மாதிரி விணப்பப் படிவத்தில் இலக்கம் 12 பந்தி மற்றும் அதன் கீழ் குறிப்பிட்டுள்ள அட்டவணை நீக்கப்பட்டுள்ளது.

இலங்கை கல்வி நிர்வாக சேவையின் iii ஆம் வகுப்புக்குச் சோ்ந்துக்கொள்ளும் திறந்த போட்டிப்பரீட்சை – 2015/2016

வா்த்தமானி அறிவித்தலின் முதலாம் பந்தியில் குறிப்பிடப்பட்ட ”தகைமை கொண்டோரினைத் தோ்ந்தெடுப்பதற்கான போட்டிப்பரீட்சைக்காக அரச சேவை ஆணைக்குழுச் சபையின் உத்தவின் பிரகாரம் விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.” என்பது, ”கீழ்க்குறிப்பிட்ட தகைமை கொண்ட விண்ணப்பதாரிரிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன” என திருத்தப்படுகின்றது.
1.       (ஆ)இல் காட்டப்பட்டுள்ள அட்டவயைின் மேலே காட்டப்பட்டுள்ள பந்தி நீக்கப்படுகின்றது. (இடநிலைப்படுத்தலுக்குரிய)
2.       (ii) இப்பதவி நிரந்தரமானது.
5.       வயதெல்லை.-2016.02.01ஆந் திகதியன்று வயது 22 இற்குக் குறையாமல் இருக்க வேண்டியதுடன் 32 வயதினை விடத் தாண்டாமலும் இருக்க வேண்டும்.
திறந்த போட்டிப் பரீட்சைக்குரிய மாதிரி விண்ணப்பபடிவத்தில் இலக்கம் 8 பந்தி மற்றும் அதன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள அட்டவணை நீக்கப்பட்டுள்ளது.
டபிள்யூ.எம்.பந்துசேன.
                                                                                          செயலாளா்.
                                                                                                கல்வியமைச்சு
                                                                                        இசுருபாய.




Disqus Comments