Saturday, May 28, 2016

மீண்டும் மழை. களனி ஆறு உள்ளிட்ட சில ஆறுகளின் நீர்மட்டம் மீண்டும் அதிகரிப்பு

களனி ஆறு உள்ளிட்ட சில ஆறுகளின் நீர்மட்டம் மீண்டும் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
களனி ஆற்றின் நாகலகம்வீதி நீர் வாசிப்பு மானியில் இன்று காலை 3.35 ஆக நீர்மட்டம் பதிவாகியுள்ளது.
நீர் வாசிப்பு மானியில் 5 அடிகள் வரை நீர்மட்டம் பதிவாகுமாயின் நீர்பெருக்கெடுப்பு மட்டமாக கருதப்படும்.
இதேவேளை, கடந்த 21 மணித்தியாலங்களில் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவு மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
கொழும்பில் 103 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இதனையடுத்து, கொழும்பு நகரின் சில இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
தும்முல்ல, ஆமர் வீதி, வெல்லம்பிட்டி, கோதமி மாவத்தை ஆகிய பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக எமது செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
Disqus Comments