நபிகளாருக்கும் அழ்ழாஹ்வுக்கும் இடையிலுள்ள தொடர்புமுறை என்னவென்பது குறித்த தன்னுடைய மிகச்சரியான புரிதலைத்தான் ஞானசார வெளிப்படுத்தியுள்ளார்.
என்னைப்பொறுத்த மட்டில் இந்த விடயத்தில் முஸ்லிம்கள் உணர்வுகளுக்கு அடிமைப்பட்டு அவர்மீது ஆத்திரப்படவேண்டிய அவசியமே இல்லை.
கலிமா ஷஹாதாவின் கடைசிப்பகுதியை மனதார ஏற்றுள்ளார். அந்த நம்பிக்கையும் கருதுகோளும்தான் முஸ்லிம் சமூகத்தை நோக்கிய அவ்வாறானதொரு வேண்டுகோளை விடுப்பதற்கு அவரைத்தூண்டியுள்ளது.
அந்தவகையில் நபிகளாரை இறைவனின் தூதரென பகிரங்கமாக அறிவித்துள்ள ஞானசார இனிவரும் காலங்களில் வணக்க, வழிபாடுகள் அனைத்தும் அழ்ழாஹ் ஒருவனுக்கு மாத்திரமே உரித்தானது என்ற இறையியல் கோட்பாட்டையும் இதேபோன்று அல்லது வேறொரு பாணியில் அறிவிப்பார் எனவும் நாம் எதிர்பார்க்கலாம்.
யாருடைய உள்ளங்கள் எப்போது திரும்புமென யார்தான் சொல்லமுடியும்?
இந்த ஞானசாரவை விடவும் மிகமோசமான எதிரிகளையெல்லாம் கண்டுவிட்டது இஸ்லாமிய வரலாறு.
எனவே பிரார்த்திப்போம் இந்த புனிதமான மாதத்தில், ஞானசாரவின் உள மாற்றத்திற்காக.....
-முஹம்மது நியாஸ்-
