ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழுக்குழு கூட்டம் ஜனாதிபதியின் வீட்டில் கடந்த இருதினங்களுக்கு முன்னர் இடன்பெற்றது.
இந்த கூட்டத்தில் சுதந்திர கட்சி முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர் .
கலந்துறையாடல் நிறைவடையும் தருவாயில் ஜனாதிபதி மைத்ரியிடம் ராஜாங்க அமைச்சர் டிலான் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
"அடுத்த ஜனாதிபதி தேர்தலில் நீங்களே போட்டியிடவேண்டும், உங்களை தவிர சுதந்தித கூட்டமைப்புக்கு சிறந்த வேட்பாளர் இருக்க முடியாது" என குறிப்பிட்டுள்ளார்.
அதனை ஆமோதிக்கும் வகையில் நிமல் சிரிபால பேச தயாராக குறுக்கிட்ட ஜனாதிபதி
"நான் தேர்தலில் போட்டியிடும் போது மக்களுக்கு வாக்குறுதி ஒன்றை அளித்தேன், அதனை என்னால் மீற முடியாது அந்த நேரத்திற்கு பொருத்தமான ஒருவரை நாம் களமிறக்குவோம்" என கூறிவிட்டு அவரை சந்திக்க வந்திருந்த பிரதமருடன் கதைப்பதற்காக எழுந்து சென்றுள்ளார் ஜனாதிபதி..
