சிகரட்டிற்கான வரி 15 வீதத்தினால் அதிகரிப்படவிருப்பதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இதற்கு அமைவாக சிகரட் ஒன்றின் விலை 55 ரூபாவாக அதிகரிக்கப்படும் எனவும அமைச்சர் கூறினார்.
சுகாதார அமைச்சில் நடைபெற்ற கூட்டத்தில் சுகாதார அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
சுருட்டு மற்றும் பீடி ஆகியவற்றின் பாவனையையும் குறைக்க வேண்டியுள்ளதாக அமைச்சர் இதன் போது சுட்டிக்காட்டினார்.
தற்போது சிகரட் ஒன்றின் விலை 7 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.