Tuesday, October 18, 2016

சவூதி அரேபியாவில் திருமணம் முடித்து ஒரே மாதத்தில் 270 கோடிக்கள் வாரிசுச் சொத்தாக பெற்ற 22 வயதுப் பெண்!


22 வயதான பெண்,  திருணம் முடித்து ஒரு மாதம் வரை  மட்டும் குடும்ப வாழ்க்யைின்  பின் கணவன் மரணிக்க இறந்த கணவனின்   சொத்தில் இருந்து 67 மில்லியன் சவூதி அரேபியா றியால்கள் (270 கோடிக்கள்)  பெற்றுக் கொண்ட  சம்பவம் சவூதி அரேபியாவில் அண்மையில் பதிவாகியுள்ளது. 

கோடிஸ்வரரான  மேற்படி தொழில் அதிபா் கடந்த ஒரு மாதத்துக்கு 
முன்னா் சகோதரா்கள், மற்றும் நெருங்கிய நண்பா்களுக்கு  சாட்சியத்துடன் திருணம் செய்து கொண்டார். ஒரு மாதத்தின் பிறகு திடீ ”ஹார்ட் அட்டக்” காரணமாக திடீரென மரணமடைந்தார்.


மேற்படி திருமணம் குடும்பத்தாருக்கு தெரியவர சொத்துப்பங்கீட்டின் போது  சட்டப் பிரச்சினை ஏற்பட்டது. அவா்களது திருமணம் முறைப்படி பதிவு செய்யப்பட்டு இருந்தமையால் மேற்படி 67மில்லியன் சவூதி அரேபியா றியால்களை வாசிசுச் சொத்தாக பெற்றுக்  கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

(கல்ப் தமிழ் போய்ஸ்)





Disqus Comments