உள்ளுராட்சி மன்ற எல்லை நிர்ணய நடைமுறை சார்ந்த மேன்முறையீடுகளை விசாரிக்கும் கால எல்லை டிசம்பர் 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
உள்ளுராட்சி மன்ற மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா இது தொடர்பாக தெரிவிக்கையில் எல்லை நிர்ணய மேன்முறையீட்டுக் குழுவின் கோரிக்கையை ஏற்று கால எல்லையை நீடித்ததாக தெரிவித்தார்.
டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் தனது அறிக்கை சமர்ப்பிக்குமாறு குழுவிற்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் மேலும் கூறினார்.
எல்லை நிர்ணய மேன்முறையீட்டுக் குழுவின் அறிக்கை முழுமையானதாக இருப்பதை உறுதி செய்வது அரசாங்கத்தின் நோக்கமாகும். அறிக்கiயின் நகலை சகல அரசியல் கட்சிகளுக்கும் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
