Thursday, October 6, 2016

ஜெயலலிதா உடல் நலம் பெற வேண்டி அதிமுக கிளைச் செயலாளர் தீக்குளிப்பு!

விருதாச்சலம்(06 அக் 2016): முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் பெற வேண்டி அதிமுக கிளைச்செயலாளர் தீக்குளித்த சம்பவம் கடலூரில் விருதாச்சலம் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை தேறி வருவதாக மருத்துவமனை நிர்வாகம் கூறி வருகிறது.

இதற்கிடையே முதல்வர் உடல்நிலை குறித்து வதந்திகள் பரவி பொதுமக்களை அவ்வப்போது அதிர்ச்சிஅடைய செய்து வருகின்றது..

இந்நிலையில், முதலமைச்சர் உடல்நலம் பெற வேண்டி கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே அ.தி.மு.க புதுக்கூரைப்பேட்டையைச் சேர்ந்த அ.தி.மு.க. கிளை செயலாளர் கணேசன் என்பவர் நேற்று மாலை தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனால் அவரது உடல் வெந்தது. உடனடியாக அவரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 30 சதவீத தீக்காயமடைந்த அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Disqus Comments