Tuesday, October 25, 2016

பாடசாலை பற்றாக்குறைகளுக்கு மாகாண கல்வி அதிகாரிகள் பொறுப்புக் கூற வேண்டும் - ஜனாதிபதி

நாட்டின் பாடசாலைகளில் தளபாடங்களுக்கு பற்றாக்குறை இருக்குமாயின் அதற்கு மாகாண கல்வி அதிகாரிகள் பொறுப்புக் கூற வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொலநறுவ ஹிங்குராங்கொட ஆனந்த மகளிர் கல்லூரி நிகழ்வில் நேற்று கலந்து கொண்டு ஜனாதிபதி தகவல் தொழில்நுட்ப விஞ்ஞான கூடத்தை மாணவர்களிடம் கையளித்தார். மாணவத் தலைவிகளுக்கு உத்தியோகபூர்வ இலச்சினையையும் அணிவித்தார்.
 
கல்லூரிக்கு வருகை தந்த ஜனாதிபதிக்கு மாணவர்கள் அமோக வரபேற்பளித்தனர். 2 மாடிக்கட்டிடத்தையும் திறந்து வைத்த ஜனாதிபதி மாணவர்களிடம் நட்புறவுடன் உரையாடினார்.
 
மாகாண சபைகள், முக்கியத்துவம் வாய்ந்த அபிவிருத்தி ஆவணங்களுக்கு அமைவாக நிதியை பயன்படுத்த வேண்டும் என்று சுட்டி காட்டிய ஜனாதிபதி அடுத்த வருடம் முதல் மாகாண சபைகளுக்கு
நிதி ஒதுக்கும் போது முக்கிய அபிவிருத்திகளை இனங்காணும் ஆவணங்களுக்கு அமைய நிதி செலவிடப்பட வேண்டும் என்று சுற்று நிரூபம் வெளியிடப்பட இருப்பதாகவும் கூறியுள்ளார். 
 
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றுகையில். அபிவிருத்தியின் முக்கியத்துவம் பற்றி  கண்டறியாது தனிப்பட்ட நபர்களின் கருத்துக்களுக்கு அமைய நிதி செலவிடப்படுவதால் பல மாகாணங்களுக்கு அபிவிருத்தியில் அநீதி இழைக்கப்படுவதாகவும் ஜனாதிபதி கூறினார். கல்வித்துறையின் அபிவிருத்திக்கு அமைவாக வகுப்பறை. குடிநீர் தேவை மின்சாரம்,விளையாட்டு போன்றவைகளும் அபிவிருத்தி செய்யப்படுவது அவசியமாகும் என்றும் மேலும் அவர் கூறினார்.
 
இந்நிகழ்வின் போது கல்லூரி அதிபர் ஷியாமா விஜயசேகர ஜனாதிபதிக்கு நினைவு சின்னம் ஒன்றை வழங்கினார்.
Disqus Comments