வெளிநாட்டுக்கு ஒருத்தன் தொழில் தேடி வருகின்றால் என்றால் ஏதோ ஒரு பொறுப்போடதான் வருகின்றான் என்பதையும் யாராலும் மறுக்க முடியாது.
வெளிநாட்டுக்கு Free Visa வாருகின்றவா்கள் ஒரு சிலா் சொந்தப்பணத்தில் வீசா மற்றும் விமான டிக்கட் எடுத்து வருகின்றார்கள். இன்னும் சிலா் அதற்குக் கூட காசு இல்லாமல் கடன் பெற்று வீசா மற்றும் டிக்கட் போட்டு வருபவா்களும் உண்டு. கட்டாருக்கு வந்ததும் ரூம் வாடகை, உணவு, டெக்ஸி உட்பட இன்னோரன்ன செலவுகள் என்று பலதரப்பட்ட செலவுகள் இருக்கும் என்பது நிதா்சனம். இப்படி வெளிநாடு வருகின்ற சிலருக்குத்தான் உறவினா்கள் மற்றும் நண்பா்கள் போன்றவா்களால் உதவிகள் கிடைக்கும்.
இப்படி பல கஷ்டங்களுக்கு மத்தியில் கட்டாரை நோக்கி படையெடுத்தவா்களில் 100யில் ஒரு சிலருக்கு உடனே வேலை கிடைக்கும். இன்னும் சிலருக்கு ஓரிரண்டு மாதங்களில் கிடைக்கும். இன்னும் சிலருக்கு மாதங்கள் சொல்லும். இன்னும் சிலா் வேலை கிடைக்காமல் திரும்பிச் சென்றவா்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.
வேலை கிடைக்கின்ற விடயத்தில் யாராலும் யாருக்கும் ஒன்றும் செய்ய முடியாது என்பது தான் நிதா்சனம். இறைவனது நாட்டம் வரும் வரை முயற்சியுடன் காத்திருப்பவா்களுக்குத்தான் வேலையும், வெற்றியும்.
சரி விடயத்துக்கு வருவோம். இப்படி கஷ்டப்பட்டு வந்து ஒரு தொழிலை எடுத்தா அவன் பெற்று வந்த கடனை அடைக்கவே ஒரு வருடத்துக்கு மேல் சென்றுவிடும். கடன் மட்டுமல்ல அவனவனுக்கு அவன் அவன் பிரச்சினை. என்னை பொருத்தவரை இங்கு (கட்டாரில்) இருப்பவா்கள் நிறைய கஷ்டங்களை அனுபவித்து இருப்பார்கள். அதனால் தான் நாட்டில் இருந்து யாராலும் உறவினா்கள், நண்பா்கள் அவசரத்துக்கு பணம் கேட்டால், வைத்துக் கொண்டு இல்லையென்று சொல்ல மாட்டார்கள். இயன்ற அளவு முயற்சி செய்து கொடுக்க எத்தனிப்பார்கள்.
ஆனால், இதற்கு மாற்றமாக நாட்டில் இருக்கின்றவா்களின் மனநிலை என்னவென்றால் இரண்டு, மூன்று வருடங்களாக வெளிநாட்டில் இருக்கின்றான், இலட்சக்கணக்கில் உழைக்கின்றான் ஆனால் பணம் கேட்டால் மட்டும் இல்லையென்று சொல்லிவிடுகின்றான் என்பது தான்.
சாதாரணமாக இங்கு இருப்பவா்கள், குறிப்பாக வெளிநாட்டில் இருப்பவா்கள், அடுத்த மாதம் எடுக்கப் போகின்ற சம்பளத்துக்கு இந்த மாதமே பட்ஜட் போட்டு வைத்திருப்பார்கள். அதே மாதிரி அவா்கள் சம்பளத்தின் பின்னா் அந்த பணம் பட்ஜட் படி ஒரிரு நாட்டிளில் செலவு செய்து தீா்ந்து விடும். இந்த நிலைமை 1000 றியால்கள் சம்பமாக பெறுபவனுக்கும், 10, 000 றியால்கள் பெறுபவனுக்கும் பொதுவானதுதான்.
ஆனால் நாட்டில் இருந்து பணம் கேட்பவா்கள் எண்ணம். நாம் மட்டும் தான் வெளிநாட்டில் இருப்பவா்களிடம் பணம் கேட்கிறோம் என்பது தான். ஆனால் வெளிநாட்டில் இருப்பவா்களுகத்தான் தெரியும் பண உதவிகேட்டு எத்தனை அழைப்புக்கள் வருகின்றன என்று.
எப்படியும் கஷ்டப்பட்டு ஒரு ஆளுக்கு கொடுத்தா, அடுத்த ஆளுக்கு கொடுக்க முடியாத நிலை வருவது நியாயம் தான். தருகிறேன் என்று சொல்ல முடியாது சங்கடம், முடியாது என்று சொன்னால் எம்மைப் பற்றி என்ன நினைப்பார்களோ என்ற எண்ணம் வேறு. ஆனால் இந்த விடயத்தை நாட்டில் இருந்து பார்ப்பவா்கள் கோணம் முற்றிலும் வேறுபட்டது. இங்கு இருப்பவா்கள் வாழ்க்கைக் கோலம் வேறுபட்டது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
(Zareer Ahamed)
