Monday, October 24, 2016

மொழியை யடிப்படையாகக்கொண்டு நாட்டில் எந்தவித முரண்பாடுகளும்; ஏற்படக்கூடாது - ஜனாதிபதி

மொழியையடிப்படையாகக்கொண்டு நாட்டில் எந்தவித முரண்பாடுகளும்ஏற்படக்கூடாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் தமது தாய்மொழி மூலம் நிர்வாக செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான வசதிகளை செய்து கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
 
கண்டி தர்மராஜ கல்லூரி மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற அகில இலங்கை தமிழ் மொழி தின பரிசளிப்பு வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து உரையாற்றும் போதே இந்த விடயங்களை ஜனாதிபதி குறிப்பிட்டார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இங்கு மேலும் உரையாற்றுகையில்  வ்வேறு மொழிகள் பேசும் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் கடமை என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
 
உலகின் சில நாடுகளில் மொழி ரீதியான முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார். அவ்வாறான முரண்பாடுகள் இலங்கையிலும் முன்னர் இடம்பெற்றன.
சிறுபான்மை மக்கள் பேசும் மொழிகளையும்  நிர்வாக செயற்பாடுகளில் உள்வாங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும எவருக்கும் தமது தாய்மொழியில் கல்வி செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட உரிமை ஒன்று காணப்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
 
சிங்கள மொழியை தமிழ் மற்றும் முஸ்லிம் மாணவர்களுக்கும் தமிழ்மொழியை சிங்கள மாணவர்களுக்கும் கற்பிப்பதற்கு தேவையான பௌதீக மற்றும் மனித வளங்கள் விருத்தி செய்யப்படும் என்றும் ஜனாதிபதி இங்கு தெரிவித்தார்.  
Disqus Comments