Huawei, தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையை வழங்குவதற்கான ஒரு ஒருங்கிணைந்த முயற்சியாக, புதிய வர்த்தகநாம காட்சியறையொன்றை பொலன்னறுவை நகரில் திறந்து வைத்துள்ளது.
Huawei, வாடிக்கையாளர்களும், எதிர்காலத்தில் வாடிக்கையாளர்களாக மாறவுள்ளவர்களும் பொலன்னறுவை, கதுருவெல Galle City Smart கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள புத்தம் புதிய வர்த்தகநாம காட்சியறையின் மூலமாக Huawei இன் அதியுயர் தரத்திலான உற்பத்திகளை தற்போது முழுமையாக அனுபவிப்பதற்கு வாய்ப்புக் கிட்டியுள்ளது.
நாட்டிலுள்ள அனைத்து பிரதான நகரங்கள் மற்றும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் தனது அடிச்சுவட்டை விஸ்தரிக்கும் Huawei இன் முனைப்புடனான திட்டங்களுக்கு இப்புதிய வர்த்தகநாம காட்சியறையை ஆரம்பித்து வைத்துள்ளமை சிறப்பாகத் துணைபோகின்றது.
