புதிதாக பிறந்த குழந்தையின் உடல் டோஹாவிலிருந்து இந்துனோசியாவின் ஜகார்த்தா நோக்கி வந்திறங்கிய விமானத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக பெண் ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு விசாரிக்கப்படுவதாகவும்
செய்திகள் வெளியாகியுள்ளன.
கண்டெடுக்கப்பட்ட குழந்தை 5 - 7 மாதங்களுக்கு இடைப்பட்டதாக இருக்கும் என்பதாவும் மேற்படி சிசு டிஸ்ஸுவில் சுற்றப்பட்டு இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.