மதுரங்குளிய கடையாமோட்டை பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவிக்கு எதிராக முந்தலம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர், தான் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது தனது மனைவி வீட்டில் உள்ள தனது நகைகள் மற்றும் பணங்களை திருடித் தப்பிச் சென்றுள்ளார் என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதேவேளை, பெண், ரூபா 4 மில்லியன்(4,172,000) பணம் மற்றும் 20 பவுன் நகைகளை திருடிச் சென்றுள்ளதாகவும் பெண்ணின் கணவன்முறைப்பாடு செய்துள்ளார்.
மேலும், இந்த குற்றச்சாட்டுடன் குறித்த பெண் தொடர்புப்பட்டுள்ளாரா? என பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.