Tuesday, December 13, 2016

சவூதியில் முகத்திரையின்றி புகைப்படத்தை டுவிட்டரில் போட்ட பெண் கைது செய்யப்பட்டார்.

பொது வெளியில் முகத்திரயில்லாமல் நின்று புகைப்படம் எடுத்து அதனை டுவிட்டரில் பதிவு செய்த பெண் நேற்று றியாத் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளாள். 
இது  தொடா்பாக போலிஸ் பேச்சாளா் பவாஸ் அல் மய்மன் கருத்து தெரிவிக்கும் போது அவரது உண்மையான பெயைரைக் குறிப்பிடவில்லைஎன்றாலும் பல இணையத் தளங்கள் அவளது பெயா் “மலக் அல்-செஹ்ரி என்பதாக குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்தார். 
மேற்படி பெண் கடந்த மாதம் தனது முகத்திரை இல்லாத படத்தை டுவிட்டரில்  பதிவு செய்ததைத் தொடா்ந்து அவளுக்கு எதிராக பலத்த கண்டனங்கள் எழுந்தனை என்பதையும் அதில் சிலா் அவா் கொலை செய்யப்பட வேண்டும் என்ற அளவுக்கு தங்களது கருத்துக்களை தெரிவித்தும் இருந்தனா் என்பதைகுறிப்பிட்டார்.


சவூதி அரேபியா சட்டத்தின் பிரகாரம் பெண்கள் தலைமுதல் கால் வரை மறைத்து இருக்கவேண்டும். அத்தகை சட்டத்தை மீறியமைக்காகவே மேற்படி பெண் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


Disqus Comments