Sunday, December 25, 2016

க.பொ.த.சாதாரன தரப்பரீட்சை எழுதிய மாணர்களுக்கான உயர் தர கல்வி வழி காட்டல்கருத்தரங்கு வெற்றிகரமாக நிறைவு (PHOTOS)

(செய்தி சாய்ந்தமருது முஹம்மட் றின்ஸாத்) கல்முனை மாநகரில் மிக வெற்றிகரமாக சமூக சேவைகளை முன்நெடுத்துவரும் மாற்றத்துக்கான இளைஞர்அமைப்பின் ஏற்பாட்டில்.

இவ்வருடம் க.பொ.த.சாதாரன தரப்பரீட்சை எழுதிய மாணர்களுக்கான உயர் தர கல்விவழிகாட்டல்  கருத்தரங்கு இன்று  ( 24-12-2016 ) BCAS CAMPUS KALMUNAI (நகர மண்டபம்  முன்பாக) நுாற்றுக் கணக்கான மாணவர்கள் பங்கு பற்றுதலோடு மிக சிறப்பாக இடம்பெற்றது.

இதில்,
உயர்தரப் பாடநெறிகளை தெரிவு செய்தல், உயர்தரம் கற்கின்ற போது மாணவர்களது திறன்களை விருத்தி செய்வது எவ்வாறு?, உயர்தரக்கல்வி பெறுபேறுகளும் பல்கலைக் கழக அனுமதியும். போன்ற தலைப்புகளில் மிக வரிவாக மாணவர்களுக்கு தெளிவு படுத்தப்பட்டது.

எதிர்காலத்தில் மாணவர்களை கருத்தில் கொண்டு கல்முனை மாநகரில் மிக வெற்றிகரமாக சமூக சேவைகளை முன்நெடுத்துவரும் மாற்றத்துக்கான இளைஞர்அமைப்பினர் பல நிகழ்வுகளை நடாத்த திட்டமிட்டிருப்பதும் ஒரு சிறப்பம்சமாகும்.





Disqus Comments