Thursday, December 29, 2011

பேஸ்புக்கை கலக்கிய மார்பக புற்று நோய் பாதித்த ஒண்டோரியோ பெண்!

மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, உயிருக்கு போராடிய கனடிய பெண் ஒருவர், தன்னுடைய இரண்டு மார்பகங்களையும், சர்ஜரி மூலம் அகற்றி உயிர் பிழைத்தார். ஆனால் தனக்கு மார்பகங்கள் இல்லை என்ற குறையை போக்குவதற்காக மார்பகம் இருந்த இடத்தில் டாட்டூ வரைந்து அந்த இடத்தை அழகிய வண்ணங்களால் பூர்த்தி செய்தார். அவருடைய டாப்லெஸ் புகைப்படம் பேஸ்புக்கில் வெளிவந்து கிட்டத்தட்ட 90,000 நபர்கள் அந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர்.

Kelly Davidson என்ற 34 வயது ஒண்டோரியோ பெண்ணுக்கு மார்பக புற்றுநோய் இருந்ததாக மருத்துவ பரிசோதனை மூலம் தெரிய வந்தது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இரண்டு மார்பகங்களையும் நீக்கினால் மட்டுமே அவர் உயிர் பிழைக்க முடியும் என்று வலியுறுத்தியதால், தன்னுடைய இரண்டு மார்பகங்களையும் நீக்க அவர் சம்மதித்தார். அறுவை சிகிச்சைக்கு பின் கண்ணாடியில் பார்க்கும்போதெல்லாம் தனக்கு மார்பகங்கள் இல்லையே என்ற கவலை அவரை வாட்டியெடுத்துள்ளது. பின்னர் மார்பகங்கள் இருந்த இடத்தில் அழகிய வண்ணங்களுடன் கூடிய டாட்டூவ்வை வரைந்தார்.
அந்த புகைப்படத்தை தனது பேஸ்புக்கில் வெளியிட்டார். வெளியிட்ட ஒரே நாளில் அந்த புகைப்படம் 90,000 பேர்களை பகிர்ந்து கொண்டு சாதனை செய்தது.
Disqus Comments