Wednesday, January 4, 2012

ரெட்பானா ஓர் அறிமுகம்


ரெட்பானா என்பது புத்தளம் மாவட்டத்தில் முந்தல் பிரதேச செயலாளா் பிரிவில் மதுரங்குளி நகரில் அமைந்துள்ள ஓர் சிறிய கிராமம் ஆகும். இது சுமார் 1980களில் ஆரம்பிக்கப்பட்ட குயேற்றத்திட்டமாகும். ஆரம்பத்தில் இந்த கிராமம் கஜுவத்தை என்றே அழைக்கப்பட்டது. எந்த அளவுக்கு இந்த பெயர் பிரபல்யம் என்றால் ரெட்பானா என்றால் யாரும் அன்று அறிந்து இருக்க வில்லை. மாற்றமாக அனைவரும் கஜுவத்தை என்ற பெயரையே அறிந்து வைத்து இருந்தனர். இவ்வாறு அழைக்க காரணம் என்ன வென்றால் இங்கு காணப்பட்ட மரமுந்திரிகை மரங்களே ஆகும். முந்திரி தோட்டம் என்பது இதன்  பொருளாகும். கஜு என்றால் சிங்களத்தில் முந்திரி எனவும் வத்த என்றால்  தோட்டம் எனவும் கூறப்படும்.
அந்த வகையில் இப்போது ரெட்பானா என அழைக்கப்படும் இந்த குக்கிராமம் அப்போது கஜுவத்த என செல்லமாக அழைக்கப்பட்டது. 1980 களில் அதன் பெயர் ரெட்பானா என்று ஆங்கிலேயர் களால் மற்றாப்பட்டும் கூட அதன் பெயர் கஜுவாத்த என்ற பெயரே நிலைத்து நின்றது. நாளடைவில் துரதிஷ்ட வசமாக முந்திரி மரங்கள் அழியத்தொடங்கின. அதன் பிட்பாடு கஜுவத்த என்ற பெயர் மறைந்து இப்போது ரெட்பானா என்ற பெயரே நிலைத்து காணப்படுகின்றது.
Disqus Comments