Friday, May 11, 2012

முதலாவது இலங்கை பிரிமியர் லீக் (SLPL-2012)

ஸ்ரீலங்கா பிரிமியர் லீக் முதலாவது 20-20 கிரிக்கெட் தொடர் எதிர்வரும் ஓகஸ்ட் 10ஆம் திகதி முதல் 31ஆம் திகதிவரை நடாத்தப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.

கடந்தாண்டு இடம்பெறவிருந்த இத்தொடர் இந்திய கிரிக்கெட் சபையின் போதிய ஆதரவின்மை மற்றும் தொடரை நடத்தவிருந்த தனியார் அமைப்புடன் ஏற்படுத்தப்பட்டிருந்த ஒப்பந்தத்தில் எழுந்த சர்ச்சைகள் ஆகியன காரணமாக பிற்போடப்பட்டிருந்தது.

கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் காணப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்து அது தொடர்பாக ஆராய்வதற்காக விளையாட்டுத் துறை அமைச்சரால் குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.

அதன்படி கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட 5 வருட கால ஒப்பந்தம் இரத்துச் செய்யப்பட்டு புதிய திருத்தப்பட்ட ஒப்பந்தமொன்றே கைச்சாத்திடப்பட்டுள்ளது.

அணிகள்



மாகாணங்களை அடிப்படையாகக் கொண்டு இப்போட்டிகள் நடைபெற உள்ளன.  அந்த வகையில் பின்வரும் 7 அணிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
Sri Lanka Premier League T20 - Team Logos

மேல் மாகாணம் - பஸ்னாகிர பியர்ஸ்
மத்திய மாகாணம் - கந்துரட்ட கைற்ஸ்
கிழக்கு மாகாணம் - நெகநஹிர நாகாஸ்
தென் மாகாணம் - றுகுண றைனோஸ்
வட மாகாணம் - உத்தர ஒரைக்ஸ்
ஊவா மாகாணம் - ஊவா யுனி க்கோர்ண்ஸ்
வடமேல் மாகாணம் - வயம்ப வோல்வ்ஸ் 
ஆகிய 7 அணிகளும் விளையாடவுள்ளன.



அணித்தலைவர்கள் 

பஸ்னகிற (மேல்)  அணிக்கு திலகரத்ன தில்சானும் கந்துரட்ட (மலையக) அணிக்கு குமார் சங்கக்காரவும் றுகுணு (தெற்கு) அணிக்கு சனத் ஜயசூரியவும் தலைமை தாங்குவர். வயம்ப (வடமேல்) அணிக்கு மஹேல ஜயவர்தனவும் ஊவா அணிக்கு சமிந்த வாசும் தலைமை தாங்குவர். வடக்கு மற்றும் கிழக்குப் பிராந்திய அணிகளுக்கு வெளிநாட்டு வீரர்கள் அணித் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி வடக்கு அணிக்கு நியூஸிலாந்து அணித் தலைவர் டேனியல் வெட்டோரி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்குப் பிராந்திய அணிக்கு பாகிஸ்தான் அணித் தலைவர் சஹீட் அப்ரிடி தலைமை தாங்கவுள்ளார்.

ஒவ்வொரு பிராந்திய அணியிலும் 5 வெளிநாட்டு வீரர்கள் பதிவு செய்யப்படலாம். ஆனால், ஒவ்வொரு போட்டியின் போதும் ஓர் அணியில் 4 வெளிநாட்டு வீரர்கள் மாத்திரமே விளையாட முடியும். இப்போட்டிகளில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க இலங்கை கிரிக்கெட் சபையும் தேசிய கிரிக்கெட் தேர்வாளர்களும் இணங்கியுள்ளனர்.

சுமார் 70 இலங்கை கிரிக்கெட் வீரர்கள் இப்போட்டிகளில் விளையாட பதிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதலாவது இலங்கை பிரிமியர் லீக் (SLPL-2012)  யில் பங்குபற்ற  இது வரையில் தகுதி பெற்றுள்ள வெளிநாட்டு வீரர்கள்

அவுஸ்திரேலியா
டேவிட் வோர்னர் , ஷோன் டயிட், கல்லும் ஃபெர்குசன், டானியல் கிறிஸ்டியன் 

பங்களாதேஷ்
தமீம் இக்பால்  
இந்தியா 
தினேஷ் கார்த்திக், இர்ஃபான் பதான், மனீஷ் பண்டி, மனோஜ் திவாரி, முனாப் படேல், பௌல் வல்டாட்டி, பிரவீன் குமார் , ரவிச்சந்திரன் அஷ்வின், ரவிந்தரா ஜடேஜா, சௌரவ் திவாரி, உமேஷ் யாதவ், வினய் குமார் 

 அயர்லாந்து
கெவின் ஒப்ரின் 

நியூஸீலாந்து 
டானியல் விட்டோரி 

பாகிஸ்தான் 
இம்ரான் நஸீர், சகிட் அப்ரிடி, சொகைப் அக்தார், சொகைல் தன்வீர், உமர் அக்மல், வஹாப் ரியாஸ் 

தென் ஆபிரிக்கா
ஆல்பி மோர்கெல், ஹசெல் கிப்ஸ், லோன்வாபோ டொஸ்டோஃபி, மகாயா நிட்னி

மேற்கு இந்திய தீவுகள் 
கிறிஸ் கைல், டர்ரின் பிராவோ, கீரோன் பொல்லார்ட் 


Disqus Comments