Wednesday, July 25, 2012

முஸ்லிம் ஆயுதம் வைத்திருந்தால் தீவிரவாதி அமெரிக்கன் வைத்திருந்தால் மனநோயாளி

கொலையாளி
அமெரிக்காவில் கொலராடோ மாகாணத்தில், டென்வர் புறநகர் அரோராவில் அமைந்துள்ள திரையரங்கு ஒன்றில் பேட்மேன் வரிசையில் வெளிவந்துள்ள தி டார்க் நைட் ரைசஸ் என்ற படம் வெளியாகி இருக்கிறது. கடந்த 19-ந் தேதி நள்ளிரவில், அந்தப் படம் ஓடிக்கொண்டிருந்தபோது ஒரு முகமூடி ஆசாமி திரையரங்கினுள் நுழைந்தான். கண்ணீர்ப்புகை குண்டுகளை வெடிக்கச்செய்து, அந்தப் புகை மூட்டத்துக்கு மத்தியில் படம் பார்த்துக்கொண்டிருந்தவர்களை சரமாரி எந்திரத் துப்பாக்கியால் சுட்டான். 

இந்த சம்பவத்தில் 12 பேர் பலியானார்கள். 58 பேர் படுகாயம் அடைந்தனர். அமெரிக்காவை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ள இந்த சம்பவத்தை அரங்கேற்றிய ஆசாமி ஜேம்ஸ் ஹோம்ஸ் என்ற 24 வயது ஆசாமி ஆவான். அவனை உடனடியாக போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவனிடமிருந்து துப்பாக்கியை கைப்பற்றினர்.

அவனிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அவன் சம்பவம் நடந்த திரையரங்கிலிருந்து 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் 3-வது தளத்தில் அமைந்துள்ள அவனது வீட்டில் தொட்டாலே வெடிக்கக்கூடிய ஏராளமான வெடிபொருட்களை, வெடிபொருட்கள் அடங்கிய நவீன கருவிகளை குவித்து வைத்திருப்பது தெரிய வந்துள்ளது.

இதைத் தொடர்ந்து, விபரீத சம்பவங்கள் எதுவும் நிகழ்ந்து விடாமல் தடுக்கும் விதத்தில் அந்த அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வசித்து வந்த மக்கள் அங்கிருந்து பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே ஜேம்ஸ் ஹோம்ஸ் தனது வீட்டில் வெடிபொருட்கள் பொருத்திய கருவிகள் ஆகியவற்றுடன் ஒரு டைமரில் ஆடியோ கருவி ஒன்றை பொருத்தி இருப்பது தெரிய வந்துள்ளது.

அதாவது, குறித்த நேரத்தில் டைமரில் பொருத்தப்பட்டுள்ள அந்த ஆடியோ கருவியில் இருந்து பலத்த சத்தம் வெளிவரும், அது என்ன என்று அறிவதற்காக அக்கம்பக்கத்தினர் உள்ளே நுழைகிறபோது, அவர்கள் உள்ளே நுழைந்து வெடிகருவிகளை அவர்களை அறியாமல் அழுத்தி விடுகிறபோது, அவை வெடித்து பெருத்த உயிர்ச்சேதத்துக்கு வழி வகுக்கும், இதனால் பெருத்த உயிர்ச்சேதத்தை ஏற்படுத்த முடியும் என்பது ஜேம்ஸ் ஹோம்சின் சதித்திட்டம் என தகவல்கள் கூறுகின்றன.

இந்த நிலையில் அரோரா நகர் போலீஸ் தலைவர் டேனியல் காட்ஸ் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தொட்ட உடனே வெடிக்கிற வெடிபொருட்களை தன் வீட்டில் ஜேம்ஸ் ஹோம்ஸ் குவித்திருக்கிறான். தீப்பற்றி எரியக்கூடிய அல்லது வெடிக்கக்கூடிய அவற்றை எப்படி அழிப்பது என்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம். நாங்கள் மணிக்கணக்கில், நாட்கணக்கில் இங்கு இருக்க வேண்டி உள்ளது. எப்படி அவன் தொட்டவுடன் வெடிக்கத்தக்க வெடிபொருட்களை குவித்துள்ளான் என்பது குழப்பமாக உள்ளது. அவன் குவித்து வைத்துள்ள ஆயுதங்கள், வெடிபொருட்கள் அனைத்தும் சட்டத்திற்கு உட்பட்டு முறைப்படி வாங்கியதாக இருக்க வேண்டும் என்றுதான் கருதுகிறேன்.

4 துப்பாக்கிகளை அவன் உள்ளூர் துப்பாக்கி கடைகளில் கடந்த 60 நாளில் வாங்கி இருக்கிறான். 6 ஆயிரம் தோட்டாக்களையும் வாங்கிக் குவித்திருக்கிறான்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே ஜேம்ஸ் ஹோம்சின் வீட்டின் முன் அறைக்கு ஜன்னல்கள் வழியாக கேமிராக்களை செலுத்தி, படம் பிடிக்கப்பட்டுள்ளது. அதில், பல பாட்டில்களில் சந்தேகத்துக்கு இடம் அளிக்கிற திரவங்களை வைத்து அவற்றை வயர்களுடன் இணைத்து இருப்பதும் தெரிய வந்துள்ளது. இவற்றுடன் எண்ணற்ற, இனம் தெரியாத சாதனங்களும் இருப்பது தெரிய வந்துள்ளது.

ஜேம்ஸ் ஹோம்ஸ் குவித்து வைத்துள்ள வெடிபொருட்கள், சாதனங்களை வெடிக்கச்செய்து அழிப்பதற்கு எந்திர மனிதனை (ரோபாட்) பயன்படுத்துவது குறித்து போலீசாரும், தீயணைப்பு படையினரும் தீவிர பரிசீலனை செய்து வருகின்றனர்.

அமெரிக்க தியேட்டரில் துப்பாக்கிச் சூடு நடத்தி 12 பேரை கொன்ற வாலிபர், நான் பேட்மேனின் பரம எதிரி ஜோக்கர் என்று வாக்குமூலம் அளித்துள்ளான். இதனால் அவன் சைக்கோவா என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அமெரிக்காவின் கொலராடோ மாகாணம் டென்வர் புறநகரில் செஞ்சுரி 16 என்ற தியேட்டர் உள்ளது. இங்கு தி டார்க் நைட் ரைசஸ் என்ற புதிய படம் வெளியிடப்பட்டது. இது சூப்பர் ஹீரோ பட வரிசையில் அமைந்த பேட்மேன் பற்றிய கதை. கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு தியேட்டரில் படம் ஓடிக் கொண்டிருந்தது. தியேட்டரில் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள், வாலிபர்கள் என கூட்டம் நிரம்பி வழிந்தது. அப்போது ஜேம்ஸ் ஹோம்ஸ் என்ற 24 வயது வாலிபர், திடீரென வெடிகுண்டுகளை வீசி சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினான். இதில் 12 பேர் பரிதாபமாக இறந்தனர். 59 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதல் நடந்த பின் தியேட்டரை விட்டு வெளியேறி கார் பார்க்கிங் பகுதியில் அமைதியாக நின்று கொண்டிருந்த ஜேம்சை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து அரோரா போலீஸ் தலைவர் டேனியல் ஓட்ஸ் கூறியதாவது: ஜேம்ஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 வயது சிறுவன் உள்பட 12 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 3 மாத குழந்தை, 6 வயது குழந்தை உள்பட 59 பேர் காயம் அடைந்துள்ளனர்.

நள்ளிரவு காட்சிக்கு குழந்தைகளையும் சிறுவர்களையும் அழைத்து வந்திருந்தது துரதிருஷ்டவசமானது. 4 துப்பாக்கிகளில் ஜேம்ஸ் தாக்குதல் நடத்தி உள்ளான். டிக்கெட் வாங்கி கொண்டுதான் தியேட்டருக்குள் நுழைந்துள்ளான். விசாரணையின் போது, தான் ஒரு ஜோக்கர் என்று கூறியிருக்கிறான். காமிக்ஸ் கதைகளில் பேட்மேனின் முக்கிய எதிரி இந்த ஜோக்கர். தியேட்டருக்குள் நுழைந்த போது அந்த ஜோக்கர் போலவே முகமூடி அணிந்து வந்துள்ளான். தலை முடிக்கு சிவப்பு வண்ணம் பூசியிருந்தான். அரோராவில் உள்ள அவனுடைய வீட்டில் நிறைய வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட் டன. தீவிர விசாரணையில் கொலராடோ மருத்துவ பல்கலைக்கழகத்தில் அவன் படித்து வந்ததும், கடந்த ஜூன் மாதம் படிப்பை நிறுத்திவிட்டதும் தெரிய வந்துள்ளது. கடந்த 5ம் தேதி அடல்ட் பிரண்ட் பைன்டர் பேஜ் என்ற வெப்சைட்டை தொடங்கி உள்ளான். அதில் கிளாசிக் ஜிம்போ என்று தன்னை பற்றி குறிப்பிட்டு படங்களை வெளியிட்டுள்ளான். அந்த படங்கள் ஜேம்ஸ் போலவே உள்ளன. எதற்காக துப்பாக்கிச் சூடு நடத்தினான் என்பது இன்னும் தெரியவில்லை. பேட்மேன் கேரக்டர்களில் அவன் மிகவும் ஒன்றியிருப்பதோடு, மனநிலை பாதிக்கப்பட்டவன் போலவே காணப்படுகிறான். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடக்கிறது. இவ்வாறு அரோரா போலீஸ் தலைவர் டேனியல் ஓட்ஸ் கூறினார்.

சினிமா இயக்குனர்

கிறிஸ்டோபர் அதிர்ச்சி : தியேட்டரில் பலியான 12 பேருக்கு அதிபர் ஒபாமாவும் படத்தின் டைரக்டர் கிறிஸ்டோபர் நோலன் உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கிறிஸ்டோபர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தியேட்டரில் துப்பாக்கிச் சூடு நடத்தியது, அப்பாவி மக்களின் நம்பிக்கையை சிதைத்துவிட்டது. காரணமில்லாத இந்த தாக்குதலில் 12 பேர் பலியானதற்காக நான் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். தியேட்டர்தான் எனது வீடு. அங்கு இந்த பயங்கரம் நடந்ததால் எனது மனம் நொறுங்கிவிட்டது என்று கூறியுள்ளார். சாண்டிகோவில் வசிக்கும் ஜேம்ஸ்சின் தாய், துப்பாக்கிச் சூடு நடத்தியது என் மகன்தான் என்று உறுதிப்படுத்தி உள்ளார்.

ஜோக்கர் கதாபாத்திரம் ஜேம்சை பாதித்தது எப்படி? : காமிக்ஸ் புத்தகங்களில் வரும் வில்லன் கதாபாத்திரம்தான் ஜோக்கர். கடந்த 1940ம் ஆண்டில் இந்த கதாபாத்திரம் காமிக்சில் முதல்முறை இடம்பெற்றது. பேட்மேன் வாழ்க்கையில் பல சோகங்களை ஏற்படுத்துபவன் இந்த ஜோக்கர். பக்கா கிரிமினலாக சித்தரிக்கப்பட்டுள்ள கதாபாத்திரம். உலகின் 100 பயங்கர வில்லன்கள் பட்டியலில் ஜோக்கர் கதாபாத்திரமும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. டென்வர் தியேட்டரில் துப்பாக்கிச் சூடு நடத்தி 12 பேரை கொன்ற ஜேம்ஸ், இந்த கதாபாத்திரத்தால் பாதிக்கப்பட்டு சைக்கோவாக மாறி இருக்கலாம் என்று போலீசார் கூறுகின்றனர். பேட்மேனுக்கு அனார்க்கி, பேனி, ப்ளாக் மாஸ்க், கேட்மேன், கேட் உமன் என்ற பல எதிரிகள் உள்ளனர். அவர்களில் ஒருவன்தான் வில்லன் ஜோக்கர்.

நன்றி :- இணையம்


Disqus Comments