Monday, July 16, 2012

முஸ்லிம் பெண்கள் போன்று உடை அணிந்தால் ஆண்களின் உணர்வுகள் தூண்டப்படாது..!


தெரியாதவற்றை தூக்கிக் காட்டும் வகையில் பெண்கள் ஆடை அணிகின்றார்கள். பௌத்தன் என்ற வகையில் கைகளை அசைக்கும் போது செல்வோம். விருப்பம் இல்லையென்று சொன்னால் பலவந்தமாக பெற்றுக் கொள்ள முயற்சிப்போம். இவ்வாறு முயற்சி செய்தால் அதனை பாலியல் பலத்காரம் என சொல்கின்றார்கள். யார் இதற்குக் காரணம் அநாகரீகமாக ஆடைகளை அணியும் பெண்களே இதற்குக் காரணம் என அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு ரிதீ தென்ன பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

எங்களது யுவதிகளைப் பாருங்கள். ஒன்று கைகள் இல்லாத அல்லது மிகவும் குட்டையான ஆடைகளை அணிகின்றனர். அரைகுறை ஆடைகளை அணியும் பெண்களே பாலியல் வன்முறைச் சம்பவங்களுக்குக் காரணம் என தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் பெண்களைப் பாருங்கள் உடல் முழுவதையும் மூடியுள்ளனர். தலையும் மூடப்பட்டுள்ளது. சில இஸ்லாமிய பெண்கள் தங்களது முகத்தையும் மூடிக் கொள்கின்றனர். இவ்வாறு தமது கலாச்சாரத்தைப் பேணும் பெண்கள், ஆண்களைத் தூண்டுவதில்லை என்றார்.







மட்டக்களப்பிற்கான இந்த விஜயத்தின் போது மேர்வின் சில்வா அவர்கள் காத்தான்குடியிலுள்ள பேரித்தம் பழத்தோட்டத்தில் அறுவடையிலும் ஈடுபட்டார்.
















Disqus Comments