Friday, July 13, 2012

VLC Player செய்யும் விநோதங்கள்




VLC Player நாம் அனைவரும் அறிந்த ஒன்று. எல்லோரும் அதைப் பயன்படுத்தி தான் நமது வீடியோக்களை காண்போம். வெறும் வீடியோ ப்ளே செய்யும் வசதியை மட்டும் தராமல் இன்னும் நிறைய வசதிகளை கொண்டுள்ளது இது. அவை என்னவென்று பார்ப்போம் வாருங்கள்

1. Audio/Video/Subtitle போன்றவை Sync ஆகாத பிரச்சினையை சரி செய்வது எப்படி

சில சமயம் ஒரு வீடியோ நாம் ப்ளே செய்தால், அதில் உள்ளவர் பேசி முடித்த சில நொடிகள் கழித்தே ஆடியோ வரும். அதே போலவே சப்டைட்டிலும். இந்த பிரச்சினையை VLC மூலம் நீங்கள் சரி செய்யலாம்


VLC Player-இல் Tools -> Track Synchronization என்பதில் சென்று எத்தனை நொடிகள் மாற வேண்டும் என்று கொடுத்தால் போதும்.




2. Watermark ஆக நமது பெயர்/படம் கொடுப்பது எப்படி ?

சில நேரங்களில் நாம் வீடியோ எடிட் செய்யும் போது ஏதேனும் வாட்டர் மார்க் போட நினைத்து மறந்து இருப்போம், அலுவலகம் அல்லது வேறு ஏதேனும் இடத்தில் அதை ப்ளே செய்யும் போது நமது பெயர் வரவேண்டும் என்று நினைத்தால், முறையில் VLC Player-இல் அதை செய்து விடலாம்

Tools -> Effects and Filters -> Video Effects tab-> Vout/Overlay என்பதில் இது இருக்கும். ஏற்கனவே லோகோ இருந்தால் அதை பயன்படுத்தலாம், அல்லது வெறும் வார்த்தைகளை மட்டும் பயன்படுத்தலாம், ஏற்கனவே உள்ள லோகோவையும் அழிக்கலாம். (வீடியோ ப்ளே ஆகும் போது மட்டும் இவை)




3. Video வை வேறு Format க்கு Convert செய்வது எப்படி

நிறைய பேர் இதற்கு வித விதமான மென்பொருட்கள் பயன்படுத்தி இருப்பீர்கள். ஆனால் அவை எதுவுமே தேவை இல்லை. VLC Player ஒன்றே அதை செய்து விடும். Media-> Convert/Save இதில் Add File என்பதை கிளிக் செய்து Convert ஆக வேண்டிய வீடியோவை தெரிவு செய்து Convert/Save என்பதை கிளிக் செய்யுங்கள்

வரும் பகுதியில் Destination File என்பதில் Output பெயர் கொடுக்கவும். இது .PS என்று முடியும். இதற்கு அடுத்து கீழே படத்தில் உள்ளது போல செட்டிங்க்ஸ் icon மீது கிளிக் செய்தால் என்ன Format என்று தெரிவு செய்யலாம். (வீடியோ கோடெக், ஆடியோ கோடெக், சப்-டைட்டில் சேர்த்தல் என பலவும் உள்ளது

படத்தை பெரிதாக காண அதன் மீதி கிளிக் செய்யவும்




4. Video Play ஆகும் ஸ்க்ரீன் அளவை மாற்றுவது எப்படி

இது நிறைய பேருக்கு தெரிந்த வசதி என்றாலும் தெரியாதவர்களுக்கு. Video --> Crop என்பதில் உங்களுக்கு வசதியான ஒன்றை நீங்கள் தெரிவு செய்து கொள்ளலாம்.



மேலே நம் VLC Player மூலம் Audio/Video/Subtitle போன்றவை Sync ஆகாத பிரச்சினையை சரி செய்வது எப்படி, Watermark கொடுப்பது எப்படி, Video வை வேறு Format க்கு Convert செய்வது எப்படி, Video Play ஆகும் ஸ்க்ரீன் அளவை மாற்றுவது எப்படி என்ற தகவல்களை பார்த்தோம். 


இனி "Effects and Filters" பகுதியில் உள்ள வசதிகளை பற்றி காண்போம்.


முதலில் Tools --> Effects and Filters என்பதை ஓபன் செய்யவும். இப்போது பின்வருமாறு விண்டோ வரும்




இதன் வசதிகளை ஒவ்வொன்றாய் காண்போம். 


Audio Effects:


(MP3 கேட்கும் போதும் இதை பயன்படுத்தலாம்)


Graphic Equalizer: 


சில வீடியோக்களை பார்க்கும் போது இதன் ஆடியோ வேறு மாதிரி இருந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றும். அதை செய்ய VLC Player-இல் உள்ள வசதி தான் இது. இதை "Enable" என்று கொடுத்து விட்டு, வலது பக்கம் உள்ள Preset என்பதில் உங்களுக்கு பிடித்த ஒன்றை தெரிவு செய்து கொள்ளலாம். 


Compressor: 


ஆடியோ கண்ட்ரோல்க்கு பயன்படும் வசதி. 


Spatializer: 


நீங்கள் இருக்கும் இடத்திற்கு எந்த விதமான ஆடியோ எபக்ட் நன்றாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அதை இதில் செட் செய்யலாம். உதாரணம் பெரிய ஹால்கள், அறைகள், வகுப்பறை, தியேட்டர் என பல. நீங்களே எப்படி வேண்டும் என்று தெரிவு செய்து கொள்ளலாம். 


Video Effects: 


இதில் பல வசதிகள் உள்ளன. ஒவ்வொன்றாய் பாப்போம். 




 1. Essential : 


உங்கள் வீடியோக்கு Brightness, Contrast, Hue, Saturation மற்றும் பல Effects மாற்ற பயன்படுகிறது. டிவியில் இதை நாம் கலர் கரெக்சன் செய்ய இது போல செய்து  இருப்போம். இதை உங்கள் கணினியிலும் செய்யும் வாய்ப்பை VLC Player வழங்குகிறது. 


2. Crop :


முந்தைய பதிவில் எப்படி Crop செய்வது என்று ஒரு வழி சொல்லி இருந்தேன், அது குறிப்பிட்ட கலவையில் மட்டும் தரும். இந்த Crop-ஐ அகலம், உயரம் போன்றவற்றை உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப மாற்ற பயன்படுத்தலாம். 


3. Colors :


இதில் உங்கள் வீடியோக்கு நீங்கள் கலர் மாற்றங்கள் செய்யலாம். கலர் படத்தை கறுப்பு வெள்ளையில் பார்க்கலாம். இன்னும் பல Negative Color, Posterize, 
Gradient, Sepia என பல Effect-களை நீங்கள் உருவாக்க முடியும். 


4. Geometry :


இதில் "Transform" & "Rotate" மூலம் உங்கள் வீடியோவை நீங்கள் rotate செய்து பார்க்கலாம், "Intractive Zoom" வீடியோவில் குறிப்பிட்ட பகுதியை மட்டும் Zoom செய்து பார்க்கலாம், Wall மூலம் உங்கள் வீடியோவை குறிப்பிட்ட பகுதிகளாக பிரித்து, ஏதேனும் ஒரு பகுதியை மட்டும் பார்க்க விரும்பினால் பார்க்கலாம், "Puzzle Game" என்பது பெயரில் உள்ளது போல Puzzle விளையாட்டு போல உங்கள் வீடியோவை மாற்றி விடும். அதில் Black Shot தெரிவு செய்து சரியான படி Puzzle களை அடுக்க முயற்சிக்கலாம். 


5. Overlay:


இது தொடர்பாக மேலே சொல்லப்பட்டுள்ளது 


6. Atmolight :


இதற்கு Atmolight Hardware வேண்டும். இது குறித்து பின்னர் தனி பதிவாக காண்போம். 


7. Advanced :


இதில் Anti-Filckering என்பது CRT Monitor-களில் வரும் Flickering Effcet-களை நீக்க பயன்படுகிறது. இதோடு Motion Blur, Saptial Blur என்ற Blur வசதிகள் உள்ளன. இதில் Motion Blur வீடியோ frame நகரும் போது அதை காணும் வசதியை தருகிறது. (Photoshop பயன்படுத்தும் நண்பர்கள் இதை அறிவார்கள்). Clone வசதி மூலம் உங்கள் வீடியோவை இரண்டு அல்லது அதற்கு மேற்ப்பட்ட ஸ்க்ரீன்களில் காண இயலும். Water Effect, Mirror, Psychedelic, Waves, Motion Detect போன்றவை பெயருக்கேற்ற வேலைகளை செய்கின்றன. 


Synchronization


இது தொடர்பாக மேலே சொல்லப்பட்டுள்ளது  


இனி நாம் Youtube வீடியோ ஒன்றை எப்படி VLC மூலம் டவுன்லோட் செய்வது என்று பார்க்கலாம்.


1. முதலில் Youtube -இல் எந்த வீடியோவை டவுன்லோட் செய்ய வேண்டுமோ, அந்த வீடியோ முகவரியை காபி செய்து கொள்ளவும். 


2. இப்போது VLC Player - ஐ ஓபன் செய்து Media --> Open Network Stream என்பதை தெரிவு செய்யவும். 


3. கீழே உள்ளது போல, அதில் வீடியோ முகவரியை கொடுத்து Play கொடுக்கவும். 




4. இப்போது வீடியோவின் Thumbnail இமேஜ் வரும். உடனே Play பட்டனை கிளிக் செய்யவும். இப்போது வீடியோ ஸ்ட்ரீம் ஆகி play ஆக ஆரம்பிக்கும். 



இப்போது உங்கள் வீடியோவை இரண்டு வழிகளில் தரவிறக்கம் செய்யலாம். ஒன்று Network Stream பகுதியில் Play கொடுப்பதற்கு பதிலாக convert என்று கொடுப்பதன் மூலம். இது எல்லா வீடியோவுக்கும் வேலை செய்யாது என்பதால் இது உதவவில்லை என்றால் அடுத்த முயற்சி.

இப்போது உங்கள் வீடியோ play ஆகிக் கொண்டிருக்க வேண்டும். அதில் Tools >> Media Information என்பதை தெரிவு செய்யவும். அதில் கீழே Location என்ற ஒன்று இருக்கும். அதில் உள்ள முகவரி மீது ரைட் கிளிக் செய்து Select All கொடுத்து மீண்டும் ரைட் கிளிக் செய்து Copy கொடுக்கவும்.


இதை Firefox உலவியின் Address Bar-இல் கொடுக்கவும். அது இதனை Play செய்ய ஆரம்பிக்கும். அதில் ரைட் கிளிக் செய்து Save Video As என்பதை கிளிக் செய்து Save செய்து விடலாம். இது "WebM" என்ற Format-இல் Save ஆகும். இது எல்லா பிளேயர்களும் ஏற்றுக் கொள்ளும் ஒரு Format தான்.






என்றாலும் சில வீடியோக்களை இதன் மூலம் டவுன்லோட் செய்ய இயலாது. படத்தை ஒரிஜினல் குவாலிட்டியில் தரவிறக்கம் செய்ய இது தான் சரியான வழி.

அதே போல மேலும் பல தளங்களில் இருந்தும் வீடியோக்களை VLC Player-இல் பார்க்கலாம், டவுன்லோட் செய்யலாம்.

நன்றி கற்போம்




Disqus Comments