Saturday, September 1, 2012

முதலாவது SLPL சாம்பியனானது ஊவா நெக்ஸ்ட் (UVA NEXT)

கன்னி SLPL சாம்பியன் கிண்ணத்தை திலின கண்டம்பி தலமையிலான ஊவா நெக்ஸ்ட் அணி கைப் பற்றியது. கடந்த 10 திகதி ஆரம்ப்பிக்கப் பட்ட SLPL முதலாவது பருவகால போட்டிகள் இன்றுடன் நிறைவுக்கு வந்துள்ளன. இன்று நடை பெற்ற இறுதிப் போட்டியில் திலின கண்டம்பி தலமையிலான ஊவா நெக்ஸ்ட் அணியும் அஞ்சலோ மெதிவ்ஸ் தலமையிலான நெகனேகிற நாகாஸ்  அணியும் மோதின. நாணய சுழட்சியில் வெற்றி பெற்ற நெகனேகிற நாகாஸ் அணித்தலைவர் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார். இடையில் மழை குறுக்கிட்டதன் காரணமாக 20 ஓவர்கள் 15 ஓவர்களாக குறைக்கபட்டன. 

15 ஓவர்கள் நெகனேகிற நாகாஸ் அணி 4 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து 134 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. நெகனேகிற நாகாஸ் அணி சார்பாக அணித்தலைவர் அஞ்சலோ மெதிவ்ஸ் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினார். 27 பந்துகளில் 4 சிக்சர்கள் 4 ஃபோர்கள் உள்ளடங்கலாக 73 ஓட்டங்களை தனது அணிக்காக பெற்றுக் கொடுத்தார். இந்த அரைச் சதத்தின் மூலம் குறைந்த பந்துகளில்(21 பந்துகளில் ) அரைச் சதம் பெற்றவர் என்ற பெருமையும் ஊதுறு அணி வீரர் இம்ரான் பர்காத் உடன் பகிர்ந்து கொண்டதோடு இந்த SLPL தொடரில் அதிகூடிய ஓட்டங்களை பெற்றவர் (மொத்தம் 211 ஓட்டங்கள் )என்ற பெருமையையும் பெற்றுக் கொண்டார். ஏனைய வீரர்கள் அனைவரும் எதிர்பார்த அளவு பிரகாசிக்க வில்லை. 

பதிலுக்கு ஊவா நெக்ஸ்ட் அணி துடுபெடுத்தாடி சற்று நேரத்தில் மழை குறுக்கிட்டதன் காரணமாக Duckworth–Lewis method மூலம்19 ஓட்டங்களால் ஊவா நெக்ஸ்ட் அணி பெற்றது. 5.1 ஓவர்கள் பந்து வீசப்பட்ட நிலையில் ஊவா நெக்ஸ்ட் அணி ஒரு விக்கட்டை மாத்திரம் இழந்து 63 ஓட்டங்களை பெற்றிருந்தது. ஊவா நெக்ஸ்ட் அணி சார்பாக  டில்ஷான் முனவீர  23 பந்துகளி இரண்டு 4 ஓட்டங்கள் மற்றும் ஐந்து 6 ஓட்டங்கள் உள்ளடங்கலாக 44 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். ஊவா நெக்ஸ்ட் அணி நெகனேகிற நாகாஸ்  அணியை விட 19 ஓட்டங்கள் மேலதிகமாக பெற்றிருந்தமையால் முதலாவது SLPL இன் ஜாம்பவானாக வெற்றி வாகை சூடிக் கொண்டது. 

போட்டியின் சிறப்பாட்டக்காரராக ஊவா நெக்ஸ்ட் அணியின் வீரர் டில்ஷான் முனவீரவும் தொடரின் சிறப்பக்காரராக நெகனேகிற நாகாஸ் அணியின் வீரர்  ஷமீந்த ஏறங்க வும் தேர்வு செய்யப்பட்டனர். 



Disqus Comments