2011ம் ஆண்டு குடிசன மதிப்பீட்டின் பிற்பாடு இலங்கை முஸ்லீம்கள் மீது பெருப்பான்மை இனத்தவர்களால் அநியாயங்கள் அக்கிரமங்கள் ஆங்காங்கே இழைக்கப்படுவதை நாம் அவதானிக்க முடியும். அந்த வகையில் தான் இந்த பர்தாவை கலட்டினால் தான் பரீட்சை அழுத அனுமதிக்க முடியும் என்ற உத்தரவும் பார்க்கப் படவேண்டிய ஒன்றாக காணப்படுகின்றது.
இஸ்லாமிய சீருடை அணிந்து உயர்தரப் பரீட்சை எழுதச்சென்ற கண்டி, படகொல்லாதெனிய ஜமாலிய முஸ்லிம் மகா வித்தியாலய மாணவிகளின் பர்தாவை கழற்றிய பின்பே பரீட்சை எழுதுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பரீட்சை ஆணையாளருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது,
அக்குறணை நகருக்கு அண்மையிலுள்ள பூஜாப்பிட்டிய மத்திய கல்லூரியிலுள்ள பரீட்சை மண்டபத்திலேயே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. பரீட்சை மண்டபத்தில் உதவிப் பரீட்சை நோக்குனராகப் பணியாற்றிய பெரும்பான்மை இனத்தைச் சார்ந்த ஒருவரினாலேயே இந்த உரிமை மீறல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உயர்தரப் பரீட்சைக்கு தோற்ற வேண்டுமானால் தலை திறந்தே இருக்கவேண்டுமென அதிகாரி கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளார். பர்தாவை கழற்ற மாணவிகள் தயக்கம் காட்டியபோது விடாப்பிடியாக நின்ற குறித்த அதிகாரி 30 மாணிவகளும் பர்தாவைக் கழட்டிய(நவூது பில்லா) பின்பே பரீட்சை எழுத அனுமதியளித்துள்ளார்.
உளவியல் ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்ட மாணவிகள் உயர் மட்டத்தினரிடம் இதுபற்றி முறையிட்டுள்ளனர். இதில் உடன் தலையிட்டுள்ள மத்திய மாகாள ஆளுநர் டிகிரி கொப்பேகடுவ நேரடி விசாரணைகளை இதுதொடர்பில் நடாத்துமாறு மத்திய மாகாண முஸ்லிம் கல்விக்கு பொறுப்பான றிஸ்வி பாருக்குக்கு உத்தரவிட்டுள்ளார்.
விசாரணை முடிவில் குறித்த பரீட்சை அதிகாரி தன்னால் தவறு நடந்துள்ளதாகவும், அதற்கு மன்னிக்குமாறும் கேட்டுள்ளார்.
இவர் என்ன தான் மன்னிப்பு கேட்டாலும் முஸ்லிம் தமது உரிமை விஷயத்தில் அதுவும் மார்க்கம் சம்மந்தப்பட்டவிடயத்தில் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும். பரீட்சை எழுதுவதக்கும் பர்தாவுக்கும் என்ன சம்மந்தம் இருக்கின்றதோ தெரிய வில்லை.
போகின்ற போக்கைப் பார்த்தால் இலங்கையும் மியன்மார் மற்றும் பிரான்ஸ் போல மாறிவிடுமோ என்று அஞ்சத் தோன்றுகின்றது.