இது எங்கும் அல்ல. எமது எழில் கொஞ்சும் இலங்கைத் திருநாட்டில் தான். அதிசயம் ஆனால் உண்மை. இந்த உண்மைச் சம்பவம் கண்டி வைத்தியசாலையில் நேற்று நடைபெற்றிருக்கின்றது.(15.10.2012)
பெண்ணொருவா் ஒரே தடமைவயில் ஐந்து குழந்தைகளைப் பெற்றெடுத்திருக்கின்றார்.அருவைச் சிகிட்சை மூலம் பெறப்பட்ட ஐந்து குழந்தைகளில் ஒன்றின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.உடனடியாக இன்று கொழும்பு சிறுவர் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது..
இவற்றுள் ஒரு குழந்தை ஒரு கிலோவும்; இரண்டு குழந்தைகள் 950 கிராம் எடையும் மற்றொன்று 850 கிரேமும் ஒரு குழந்தை 500 கிராம் எடையும் கொண்டதாகும். இவற்றுள் 3 குழந்தை ஆண்களும் 2 குழந்தை பெண்களுமாகும்.
கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்த ஹெட்டிமுல்லை என்னுமிடத்தில் வசிக்கும் இவர் கணவன் ஆளும் கட்சியின் கேகாலைப் பிரதேச சபை அங்கத்தவராவார். எரந்த விஜேபால என்பவரது மனைவியான திலினி ரசாங்கிகா என்பவருக்கே மேற்படி தலைப்பிரசவம் ஏற்பட்டு இவ்வாறு 5 குழந்தைகள் ஒரே நேரத்தில் கிடைக்கப்ப் பெற்றுள்ளன. 29 வயதான இவர் திருமனம் முடித்து மூன்று வருடங்கள் ஆவதாகவும் தெரிவித்தார்.
தன்னையும் தனது குழந்தைகளையும் உயிர் பிழைக்க வைத்தியசாலை டாக்டர்கள, தாதியர் உற்பட சிற்றூழியர்கள் வரை அனைவரும் கடும் பாடுபட்டு உழைத்ததாகத் தெரிவித்தார்.

இதில் அதிசயப்படுகிறத்துக்கு ஒன்றுமேயில்லை.அல்லாஹ் தான் நாடியோருக்கு இரண்டு இரண்டாகவோ,மூன்று மூன்றாகவோ வழங்குவதாக வாக்களித்து இருக்கிறான். முஸ்லிம்களாகிய நாம் அதிர்ச்சி,ஆச்சரியம்,அதிசயப்படாமல் அல்ஹம்துலில்லாஹ் என்று அல்லாஹ்வுக்கு நன்றி சொல்வோம்.