Sunday, November 11, 2012

2090 இலங்கை இஸ்லாமிய நாடாக மாறும்- சம்பிக்க ரணவக்க

இலங்கை சில ஆட்சியாளா்கள் அண்மைக்காலமாக இஸ்லாத்துக்கெதிராக பேசியும், எழுதியும் வருவதைாக அறிய முடிகின்றது.  கீழ் வருகின்ற கட்டுரையும் பெரும்பான்மை இனத்தின் அரசியல் வாதியான சம்பிக்க ரணவக்கவால் எழுதப்பட்ட ஒரு நூலில் இருந்து தொகுக்கப்பட்டுள்ளது.  கட்டாயம் கடைசி வரை படித்து விட்டு தங்களது கருத்துக்களை பதிவு செய்யும் படியும்,  தூங்கிக் கொண்டிருக்கும்எமது சமுகத்தை விழிக்கச் செய்யும் படியும் கேட்டுக் கொள்கின்றோம்.
 
* 2090 இலங்கை இஸ்லாமிய நாடாக   மாறும்
* தென்கிழக்குப் பல்கலைக்கழகம் முஸ்லிம் அடிப்படைவாதத்தின் தொட்டிலாகும்.

* முஹம்மத் பின் காஸிம் இந்தியா வந்தவேளை, நாளாந்தா பௌத்த பல்கலைக் கழகத்தை தீயிட்டுக் கொழுத்தி, 5,000 பிக்குகளை கொன்றான்.


* மலேசியா, இந்தோனேஷியாவில் வாழ்ந்த பௌத்தர்கள் இஸ்லாத்தை தழுவ பண ஆசையும் காமவெறியுமே காரணம்.


* புலிகளுக்கும் சர்வதேச முஸ்லிம் பயங்கரவாதிகளுக்கும் நெருங்கிய தொடர்புள்ளது.


* எம்.எச்.முஹம்மத், ஹாபிஸ் நஸீர் அஹ்மத், பாகீர் மாகார், ஏ.ஸீ.எஸ் ஹமீட், ஹகீம், அஷ்ரப் ஆகியோர் முஸ்லிம் அடிப்படைவாதிகளாவர்.


* இஸ்ரேல் நலன் காக்கும் பிரிவை இலங்கையிலிருந்து துரத்திய பிரேமதாச முஸ்லிம் அடிப்படைவாதிகளது சதியில் சிக்கியவராவார்.


* வடக்கிலிருந்து துரத்தப்பட்ட முஸ்லிம் அகதிகள் புத்தளத்திலும் கல்பிட்டியிலுமுள்ள சிங்களவர்களது சொத்துக்களைப் பிடித்துக் கொண்டார்கள்.


* இலங்கையிலுள்ள மத்ரஸாக்களில் முஸ்லிம் அடிப்படைவாதம் போதிக்கப்படுகிறது.


மேற்குறிப்பிடப்பட்டவை சம்பிக ரணவகவின் கருத்துக்களாகும்.

ஜாதிக ஹெல உருமயவின் சிரேஷ்ட உறுப்பினரும் தற்போதைய பொதுஜன ஐக்கிய முன்னணியின் அமைச்சருமான பாட்டாலீ சம்பிக ரணவக்க எழுதியுள்ள "அல்கைதா அல்ஜிஹாத்' என்ற தனது நூலில் மேலுள்ள கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

 (அல்ஜிஹாத் அல்கைதா இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் கடந்த காலம், தற்காலம், எதிர்காலம் பாட்டாலி சம்பிக ரணவக)  மேற்படி நூலிலிருந்து பெறப்பட்ட முக்கிய கருத்துக்களை பக்கங்களுடன் அவரது வார்த்தைகளிலேயே வரிக்கு வரி அப்படியே மொழிபெயர்த்துத் தருகிறோம்.
 அவர் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பற்றி எவ்வளவு மோசமான கருத்துக்களைக் கொண்டிருக்கிறார் என்பதை இதிலிருந்து புரியலாம். அவர் துவேஷம், பொறாமை, வைராக்கியம் , வெறி என்பனவற்றை கக்குகிறார்.

அல்கைதா அல்ஜிஹாத் என்ற நூலின் பிரதானமான கருத்துக்கள் வருமாறு;

சர்வதேச முஸ்லிம் அடிப்படைவாதம்

உலகில் பல பௌத்த நாடுகளின் வரலாறு அழிந்து போனதற்கு முஸ்லிம் அடிப்படைவாதத்தின் ஆக்கிரமிப்பு தான் காரணமாகும். ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியா வரையிலும் இதுதான் பகிரங்க உண்மையாகும். இப்போதுள்ள ஈரான், ஈராக், மக்கா மற்றும் அதனைச் சூழ உள்ள பகுதிகளிலும் ஒரு காலத்தில் பௌத்த வழிபாடுகள் நடந்துள்ளன. (முகவுரையில்)

தற்போது முழு உலகத்திலும் இஸ்லாத்தின் பரவலுக்கும் அடிப்படைவாதத்துக்கும் பணம் கொடுக்கும் நாடாக சவூதி அரேபியா மாறியிருக்கிறது. இஸ்லாமிய அடிப்படை வாதம் உலகம் பூராவும் பரவுவதற்கும், ஷரீஆ சட்டத்தை பரப்புவதற்கும் ஈரானும் அடிப்படையாக அமைந்திருக்கிறது.  இலங்கையின் அடிப்படைவாதக் குழுக்களுக்கு பண மற்றும் யுத்த உதவிகளைச் செய்யும் நாடாக ஈரானைக் காணலாம். அல்ஜீரியா, மொரோக்கோ, சிரியா, ஜோர்தான், லெபனான் மற்றும்  வளைகுடா நாடுகளிலும் அடிப்படைவாதம் பரவியிருக்கிறது. (பக்:78)


கடாபி இலங்கை வந்தவேளை முஸ்லிம்கள் அவருக்காக ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசும் போது தனது பேரப்பிள்ளை இலங்கைக்கு வரும் போது இலங்கையை ஒரு இஸ்லாமிய நாடாக மாற்றுவதற்கு சகலரும் திடசங்கற்பம் பூணவேண்டும் என்று கூறினார். கடாபி மனதால் இஸ்லாமிய அடிப்படைவாதிதான். இலங்கையிலுள்ள சில முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்கும் அமெரிக்காவை போலியாக எதிர்ப்பவர்களுக்கும் அவர் அடிப்படையான பல உதவிகளைச் செய்வது இரகசியமல்ல.

சதாம் ஹுஸைன் மேற்குலக எதிரிகளுக்கும் இலங்கையிலுள்ள முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாத கட்சிகளுக்கும் பண ரீதியான மற்றும் ஆயுத ரீதியான பல உதவிகளைச் செய்திருக்கிறார். (பக்:111, 116)


"இஹ்வானுல் முஸ்லிமூன்' இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் சவூதி அரேபியாவின் ஸலபீக்களும் அடிப்படைவாதிகளாவர். இவர்கள் தான் உஸாமா பின்லாடினை உருவாக்கினார்கள்.

சவுதி அரேபியாவுக்குள் அல்காயிதாவுக்கு பெருமளவு பணம் திரட்டப்படுகிறது. இதற்காக IIRO, ISCAG, IWWWM போன்ற நிறுவனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. உலகெங்கும் பள்ளிவாசல்களை, மத்ரஸாக்களை, பாடசாலைகளைக் கட்டுவதற்கும் சேமநலத் திட்டங்களை மேற்கொள்வதற்கும் சவூதி அதிக பணத்தை வழங்குகின்றது. இலங்கையிலும் இது இப்படித்தான் நடக்கின்றது. அந்தவகையில், பயங்கரவாதத்தின் ஆணிவேராக  சவூதியின் ரியால்தான் இருக்கிறது. (பக்:228)


இந்தியாவுக்கு வந்த முஹம்மத் பின் காஸிம், காஷ்மீரின் பௌத்த அரசை தாக்கினான். உலகின் மிகப் பெரிய பௌத்த பல்கலைக்கழகமாக இருந்த நாலந்தாவுக்கு தீயிட்டுக்  கொழுத்தி 5000 பிக்குகளைக் கொன்று குவித்தான். பிக்குகள் உணவருந்திக் கொண்டிருந்த வேளையில் தான் காஸிம் நாலந்தாவுக்குள் நுழைந்தான். அந்தப் பிக்குகள் எந்த எதிர்நடவடிக்கையிலும் ஈடுபடாததினால் இந்தக் கொலையையும் தீயிடலையும் அவனால் செய்ய முடிந்தது. தெய்வத்தில்,  வாழ்க்கைக்கோர் குறிக்கோளில் நம்பிக்கை வைக்காத பௌத்தர்கள் பிசாசுகளைப் போன்று அவனுக்குத் தென்பட்டார்கள். பௌத்தர்கள் தமது அரசை ஆயுத பலத்தால் ஆளவில்லை. எனவே, பௌத்த சாம்ராஜ்யத்தின் வடமேல் பகுதி சரிந்து விழுந்தது. பௌத்த ராஜ்யத்தின் சிதைவுகளின் மீது கட்டி யெழுப்பப்பட்ட இஸ்லாமிய அரசு கி.பி 808 வரை இந்தியாவின் சிந்துப் பிரதேசத்தில் நிலைத்தது. (பக்:52)




மலேசியா மிகவேகமாக முஸ்லிம் அடிப் படைவாதத்துக்கு உள்ளாகிவருகிறது. இந்தோனேசியாவிலிருந்த கோத்திரங்களது தலைவர்களுக்கு அரேபிய வியாபாரிகள்  பணம் (சந்தோஷம்) கொடுத்துத்தான். இஸ்லாத்தைப் பரப்பியிருக்கிறார்கள். தற்காலத்தில் அங்கு அதிதீவிரவாதிகளது கட்சியானது ஷரீஆ சட்டத்தை நடைமுறைப் படுத்தும்படி ஆர்ப்பாட்டம் செய்து தேர்தல்களில் கூட முன்னணி வகிக்கிறது.
உலகி லேயே அதிக எண்ணிக்கையிலான அங்கத்தவர்களைக் கொண்ட முஸ்லிம் அடிப்படை வாதக் கட்சி இந்தோனேசியாவிலேயே உள்ளது. (பக்:120)

மலாயா, சுமாத்தரா, ஜாவா ஆகிய தீவுகளும் அவற்றைச் சூழவுள்ள பகுதிகளும்
ஏற்கனவே பௌத்த இராஜ்யங்களாக இருந்தன. அப்பகுதிகளுக்கு அரபு வர்த்தகர்கள் வந்தார்கள். அப்பிரதேசங்களிலிருந்த கோத்திரத் தலைவர்கள், பிராந்திய ஆட்சியா ளர்கள், இராஜாக்கள், இளவரசர்கள் ஆகி யோருடன் வியாபார தொடர்புகளை வைத்து வியாபாரப் பண்டங்களைக் கொடுத்து அவர்களை வசீகரித்தார்கள். சிலருக்கு அரபிகளது வியாபார மற்றும் காம கலாசாரத்துள் இணைவதற்கு பாரம்பரிய பௌத்த மதம் தடையாக இருந்தது. உதாரணமாக மலாயாவின் அரசன் (1400ஆம் வருடம்) பல மனைவியரை வைத்துக் கொண்டு காம சுகம்பெற பௌத்த மதம் தடையாக இருந்ததால் அவன் இஸ்லாத்திற்குச் சென்றான். இஸ்லாம் அப்பகுதிகளில் அப்படித்தான் பரவியது. (பக்:55)

முஸ்லிம்கள் தமக்கிடையிலுள்ள பிரிவுகளை மறந்து ஐக்கியப்பட்டு ஒரே சர்வதேச சமூகமாக மாற வேண்டும் என ஆப்கானிவிரும்பினார். அவருக்கு 100 வருடங்களுக்குப் பிறகு அவரது கருத்தை உஸாமா பின் லாதின் நடைமுறைப்படுத்துகிறார். ஆப்கானியைப் போலவே முஹம்மத் அப்துஹவும் முக்கியமானவராக இருக்கிறார். ஸெய்யித் குத்ப், முஹம்மத் குத்ப் போன்றவர்களும் எகிப்திலே மேற்குலகுக்கெதிரான அடிப்படைவாதத்தை போதித்திருக் கிறார்கள். (பக்:65)

புலிகளும் முஸ்லிம் பயங்கரவாதிகளும்

தமிழ் பிரிவினை வாதத்தை தோற்கடிக்க முஸ்லிம் அடிப்படைவாதிகள் சிங்களவர்களுடன் ஒத்துழைக்கவில்லை. இது அவர்களது தந்திரமாகும். சிதைந்துபோன நாட்டில் கிழக்கு மாகாணத்தில் நஸரிஸ்தானையும் சபிஸ்தானையும் (கிழக்கில் தனியான முஸ்லிம் ஆட்சியை) உருவாக்குவதே இவர்களது நோக்கமாகும். (முகவுரையில்)

அல்கைதாவுக்கும் புலிகளுக்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது. புலிகளுக்கு பிலிப்பைன்ஸிலுள்ள மேரோ முஸ்லிம் விடுதலை இராணுவத்துடன் தொடர்பிருக்கிறது. புலிகள் ஆப்கானிஸ்தானுக்குச் சென்று அல்காயிதாவிடம் பயிற்சி பெற்றிருக்கிறார்கள். பிலிப்பைன்ஸின் முஸ்லிம் கெரில்லாக்களுக்கும் தமிழ் நாட்டிலுள்ள அல்உம்மா எனப்படும்குழுவினருக்கும் புலிகள் ஆயுதப் பயிற்சியளித் திருக்கிறார்கள்.

புலிகள் அல்கைதாவின் ஆயுதங்களை கடல் மார்க்கக இடத்துக்கிடம் நகர்த்துவதற்கு   உதவிசெய்திருக்கிறார்கள். கட்டுநாயக்க விமானப் படைத் தளத்தை தாக்க வந்த புலிகள்  அல்கைதாவிடம் பயிற்சி எடுத்தவர்கள் தான். (பக்:248,249)


அஷ்ரப், சேகு இஸ்ஸதீன், ஒஸ்மான் ஆகியோர் உருவாக்கிய முஸ்லிம் அடிப் படைவாதத்துக் கெதிராக நான் போர்தொடுக்க முனைந்தமைக்கு அவர்கள் தீகவாபியை திட்டமிட்டு அழித்ததுதான் காரணமாகும். (முகவுரையில்)

2003ஆம் ஆண்டு முஸ்லிம்கள் "அல் லாஹு அக்பர்' என கோஷமிட்டு ஒலுவில் பிரகடனத்தை செய்தார்கள். இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் நெருப்புப் பந்தமாக மாறியிருக்கும் தென்கிழக்குப் பல்கலைக் கழகம் தான் அதற்குத் தலைமை வகித்தது. அதன் மூலம் முஸ்லிம்கள் இந்நாட்டின் தனியான சாதியினர் என்றும் அவர்களுக்கு வரலாற்று ரீதியான பூர்வீக பூமியிருப்பதாகவும் அங்கு அவர்களுக்கு சுயாதிபத்தியமிக்க அதிகாரம் வேண்டுமென்றும் பிரகடனம் செய்யப்பட்டது. இது எத்தனை உயிர்களது அழிவில் முடியுமோ தெரியாது. (பக்:252)


1976இல் வட்டுக்கோட்டையில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியைச் சேர்ந்தவர்கள் ஒரு கருத்தரங்கை நடாத்தி சுதந்திரமான தமிழீழத்தைப் பிரகடனம் செய்தார்கள். அதற்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கோசமெழுப்பி ஆசீர்வதித்தார்கள். இதன் பின்னர் தான் 46000 பேரின் மரணத்திற்குக் காரணமான புலிகளது பிரிவினைவாத யுத்தம் வெடித்தது. இதுபோன்று தான் ஒலுவில் பிரகடனத்தையும் நாம் பார்க்கிறோம். (பக்:253)


வரலாறு இல்லாத முஸ்லிம்கள்

இலங்கை அரசின் பணத்தைப் பயன்படுத்தி முஸ்லிம் கலாசார திணைக்களத்தினால் நடாத்தப்படும் மீலாத் விழாக்களில் வெளியிடப்படும் நூற்களில் இலங்கை முஸ்லிம்களது வரலாறு கி.மு. 2ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டதென நிறுவப்பார்க்கிறார்கள். இது பொய்யான கருத்தாகும். ஆனால், முஸ்லிம் வியாபாரிகளுக்கும் இலங்கைக்குமான தொடர்பு 15ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தான் ஓரளவு ஏற்பட்டது. அதற்கு முன்னரான முஸ்லிம்களது வரலாறு பற்றிக்கூறப்படும் கதைகள் மத அடிப்படைவாதிகளது வதந்திகளாகும். அதற்கு மார்க்கத்திலுள்ள குருட்டு நம்பிக்கை தான் காரணமாகும். இதற்கு புதைபொருளாராய்ச்சி ஆதாரங்கள் எதுவும் இல்லை. கி.பி.
16ஆம் நூற்றாண்டிலிருந்து தான் இலங்கையில் இஸ்லாம் பரவியிருக்கின்றது. அது 19ஆம் நூற்றாண்டில்தான் ஸ்திரமாகப் பரவியதென முடிவு செய்ய முடியும். (பக்:256)


முஸ்லிம்களின் சுயநலமும் துரோகமும்

இலங்கையில் ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபடும் 21 பேரில் 17 பேர் இலங்கை முஸ்லிம்களாவர். (பக்:92)

போர்த்துக்கேயரது காலத்தில் முஸ்லிம்களுக்கும் போர்த்துக்கேயருக்கும் இடையே 1517ல் மோதல் ஏற்பட்டது. இங்கு சமாதானம் செய்யச் சென்ற கோட்டை அரசன் தர்மபராக்கிரமபாகுவிற்கும் போர்த்துக்கேயருக்கும் இடையில் யுத்தம் மூண்டது. முஸ்லிம்கள் கோள் சொன்னதனால் தான் சிங்கள அரசன் தம்மை எதிர்த்தான் என இதற்கு போர்த்துக்கேயர் காரணம் கூறினார்கள். (பக்:263)

போர்த்துக்கேயரால் கொழும்பிலிருந்து துரத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு சிங்கள அரசர்கள் தான் புகலிடம் கொடுத்தார்கள். ஆனால், முஸ்லிம்களது நாட்டுப்பற்று ஆரம்பத்திலிருந்தே சந்தேகத்திற்கிடமாகவே இருந்தது. முஸ்லிம்களை போர்த்துக்கேய தாக்குதல்களிலிருந்து பாதுகாத்த செனரத் அரசன் அந்த போர்த்துக்கேயர்களுக்கு எதிராக யுத்தம் புரிவதற்கு முஸ்லிம்களை அழைத்தான். 4000 பேரில் 1500 பேர் மட்டுமே முன்வந்தார்கள். அந்தவகையில், முஸ்லிம்கள் தமது இருப்பைப் பற்றி மட்டுமே யோசித்தார்களே தவிர நன்றிக் கடன் தெரிவிக்கவில்லை. கண்டி இராச்சியம் பற்றிய இரகசியத் தகவல்களை ஆங்கிலேயருக்குக் கொடுத்தவர்களும் முஸ்லிம்கள் தான். முஸ்லிம்களுடன் இணைந்து ஆங்கிலேயர் கண்டி அரசுக்கெதிராக 1802ல் யுத்தம் தொடுத்தார்கள். அந்த யுத்தத்தில் மலே, ஜாவா, முஸ்லிம் படைவீரர்களும் இருந்தார்கள். ஊவாவெல்லஸ்ஸ கிளர்ச்சியும் இதுபோன்ற காரணத்தால் ஏற்பட்டதாகும். சிங்களவருக்கெதிரான பல யுத்தங்களுக்கு முஸ்லிம்கள் காரணகர்த்தாக்களாவர். 1915ம் ஆண்டு முஸ்லிம் சிங்கள மோதல் சிங்கள எழுச்சிக்கு வித்திட்டது. பெரும்பான்மை சிங்களவரை ஆத்திரமூட்டச் செய்வது முஸ்லிம்களுக்கு பெரும் பாதிப்பை உண்டுபண்ணும் எனும் பாடத்தை முஸ்லிம்கள் படித்துக் கொண்டார்கள். (பக்: 263)

அரசியலில் முஸ்லிம் அடிப்படைவாதம்

இலங்கையின் நவீனகால இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கு எகிப்தின் அடிப்படைவாதியான ஒராபிபாஷாதான் அடித்தளமிட்டார். அதனை தேசிய ரீதியில் சித்திலெப்பை பிரசாரம் செய்தார். 1899ல் கிண்ணியாவில் மத்ரசதுல் சைதிய்யா என்ற மத அடிப்படைவாதத்தை போதிக்கும் பாடசாலை உருவாக்கப்பட்டதுடன் நவீன கால அடிப்படைவாதம் ஆரம்பமாகிறது. (பக்:270)

சிங்கள சமூகத்தில் மேட்டுக் குடிகள் அரசியல் செய்தது போல முஸ்லிம்களுக்கு மத்தியிலும் காரியப்பர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் ரீ.பி. ஜாயா போன்றவர்களும் மேட்டுக்குடிகளாயினர். இவர்கள் அரசியலுக்கு வருவதற்காக ஆங்கிலேயருக்கு சேவகம் செய்தார்கள். உள்நாட்டவர்களை கஷ்டத்தில் வீழ்துவதே இவர்களது ஒரே அரசியல் தகைமையாக இருந்தது. (பக்:272)

பதியுதீன் "ஜிஹாத்' என்ற சஞ்சிகையை வெளியிட்டதன் மூலம் இலங்கையில் இஸ்லாமிய அடிப்படைவாதம் பரவியது.

இறுதியில் இந்த ஜிஹாத் அடிப்படை வாதத்துக்கு ஐ.தே.க. தான் உதவி செய்தது. 1970 தேர்தலில் நாடுபூராகவும் சமதர்மக் கட்சி வென்றபோது பொத்துவில், நிந்தவூர் தொகுதிகளில் ஐ.தே.க.வின் முஸ்லிம் அடிப்படைவாதம் வென்றது. இதிலிருந்து அடிப்படைவாதம் எவ்வளவு பலமானது என்பதைப் புரியலாம். முஸ்லிம் அடிப்படைவாதத்தை கட்டியெழுப்பும் நோக்கில் பதியுதீன் மஹ்மூத் படித்த பரம்பரையை கொழும்புக்கு வெளியே அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, கண்டி ஆகிய பகுதிகளில் உருவாக்கினார். அவ்வாறு உருவாக்கப்படடவர்கள் தான் பின்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்தார்கள். (பக்:273)

ஐ.தே.க.வின் எம்.எச். மொஹமட், பாக்கிர் மார்க்கார், ஏ.ஸி.எஸ். ஹமீட், அப்துல் மஜீட் போன்ற தலைவர்கள் ஊடாக இஸ்லாமிய அடிப்படைவாதம் வளர்ந்தது. அவர்கள் பள்ளிகளைக் கட்டினார்கள், திட்டமிட்ட அடிப்படையில் தன்னார்வ நிறுவனங்களை ஏற்படுத்தினார்கள். 1984ல் இஸ்ரேலுடன் ஜே.ஆர். ஜயவர்தனவும் அத்துலத்முதலியும் தொடர்பினை ஏற்படுத்தியபோது புலிகளுடன் தொடர்புபட்டிருந்த அடிப்படைவாதிகளும் பொதுவாக அனைத்து முஸ்லிம்களும் அதனை எதிர்த்தார்கள். (பக்:275)

முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் அடிப்படை வாத கட்சியாகும். ஜே.ஆர். முஸ்லிம் அடிப்படை வாதத்தின் எழுச்சியை அறிந்து அதனை கவனமாக அணுகினார். முஸ்லிம் பெண்களுக்கான ஹிஜாப், ஷரீஆ சட்டம் என்பவற்றை அனுமதித்தார். இந்தச் சலுகைகளை வழங்கினால் முஸ்லிம்களை வளைக்கலாம் என நினைத்தார், ஆனால், பதிலாக முஸ்லிம் அடிப்படைவாதம் மேலும் பலமடைந்து வளர்ச்சியடைந்தது. (பக்:276)

பிரேமதாஸ யுகம்தான் (19891993) முஸ்லிம் அடிப்படைவாதத்துக்கு வளமானதாகியது. அவர் முஸ்லிம் அடிப்படை வாதத்துடன் இணைந்தார். இஸ்ரவேலை வெளியேற்றினார். பயங்கரவாதத்தை அடக்கும் உபாயங்களை ஈரானிலிருந்து பெற்றார். 1989இல் ஜே.வி.பி. கிளர்ச்சியால் நாடு பலவீனமுற்ற வேளையில் அவரது உதவிக்கு இஸ்லாமிய வங்கி வந்தது. வரலாற்றில் முதல் தடவையாக இலங்கை

அரசின் பணத்தையும் பொருட் சந்தையையும் முஸ்லிம் அடிப்படைவாதம் தனதாக்கிக் கொண்டது. அத்துடன் இந்தியாவை பிரேம தாஸ எதிர்த்ததால் அவருடன் பாகிஸ்தான் நெருங்கி வந்தது. அதன் விளைவாக பாகிஸ்தானிலுள்ள அடிப்படைவாத கலாசாலைகளுக்கு இலங்கை முஸ்லிம் இளைஞர்கள் அனுப்பப்படுவதற்கு வழிசமைக்கப்பட்டது. (பக்: 277)

1994இல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் மு.கா. 7 ஆசனங்களைப் பெற்றது. அந்த வெற்றியின் பின்னணியில் தேசிய, சர்வதேச சக்திகள் உள்ளன. நன்றாக மோப்பம் பிடிக்கும் சக்திகொண்ட அஷ்ரப் சந்திரிக்காவுடன் இணைந்தார். அன்றிலிருந்து முஸ்லிம் அடிப்படைவாதத்தின் தேன்நிலவு ஆரம்பமானது. துறைமுகத்தை ஸ்தாபிக்க எந்தவகை யிலும் பொருத்தமற்ற இடமான ஒலுவிலில் துறைமுகம் ஸ்தாபிக்க ஏற்பாடாகியது. அடுத்த இலக்கு ஒரு விமான நிலையம் தான். முஸ்லிம்களுக்கு மட்டுமான பல்கலைக் கழகத்தை தென்கிழக்கில் கட்டினார்கள்.

இது பதியுதீன் ஏற்படுத்திய முஸ்லிம் கல்வி மறுமலர்ச்சியை மேலும் பலப்படுத்தும் முயற்சியாகும். துருக்கி போன்ற இஸ்லாமிய நாடுகளில் கூட கல்விக் கூடங்களுக்குள் தடைசெய்யப்பட்ட பர்தாவும் முஸ்லிம்களது தொப்பியும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்குள் கட்டாயமாக்கப்பட்டது.

பள்ளிகளைப் பராமரிக்க சவூதியிலிருந்து 6.6 பில்லியன் ரூபாய்கள் பெறப்பட்டது. நாடுபூராகவும் 700 அடிப்படைவாத மத்ரஸாக்கள் ஸ்தாபிக்கப்பட்டன. போதைவஸ் துக்களை இறக்குமதி செய்வது, கள்ளச் சாமான்களை விற்பது, பாதாள உலகக் கோஷ்டிகளது செயற்பாடுகள், கறுப்புப் பணத்தை கையாள்வது என்பவற்றை முஸ்லிம் அடிப்படைவாதமே செய்கிறது. இந்த அடிப்படைவாதிகள் தான் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்கள் பலவற்றை நிர்வகிக்கிறார்கள். (பக்:279)










முஸ்லிம்களது பகல் கொள்ளை வடக்கிலிருந்து துரத்தப்பட்ட முஸ்லிம்களது சொத்துக்களை புலிகள் கைப்பற்றிக் கொண்டது போல், தப்பிவந்த அந்த முஸ்லிம்கள் புத்தளத்திலும், கற்பிட்டியிலும் உள்ள சிங்கவர்களது சொத்து செல்வங்களை கைப் பற்றிக் கொண்டார்கள். (பக்:278)

அஷ்ரஃப் தனது பேரம் பேசும் பலத்தை பயன்படுத்தி இலங்கையின் மிகப்பெரிய கட்சித் தலைமையகமான தாருஸ்ஸலாமையும் இலங்கையின் உயர்ந்த கட்டடமான இஸ்லாமிய தகவல் நிலையத்தையும் கட்டியிருக் கின்றார். அஷ்ரபுக்கு சவுதி நிதியிலிருந்து கோடிக் கணக்கில் பணம் கிடைத்ததாகவும் இதன் மூலவேலைத்திட்டத்தை சவுதியில் அடிப்படைவாதத்தைப் பயின்ற ஹாபிஸ் நஸீர் அஹ்மத் மேற்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அஷ்ரப் அகால மரணமாகாவிட்டால் அவர் உருவாக்கிய நுஆ 2012 இல் நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றும் தனது திட்டத்தை அடைந்திருக்கும். (பக்:280)

முஹம்மத்தின் மரணத்தின் பின்னர் அடுத்த தலைவர் யார் என்ற பிரச்சினை வந்ததுபோல அஷ்ரபின் மரணத்தின் பின்பும் அதே பிரச்சினை வந்தது. பேரியல், ஹகீம், ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் அப்பதவிக்கு போட்டி போட்டார்கள். எதிர்காலத்தில் ஹகீம், அதாவுள்ளாவுக்கிடையிலன்றி பாராளுமன்றமுறைக்கும் ஜிஹாத் ஆயுதப் போராட்டத்துக்குமிடையில் தான் மோதல் நடக்கும். பிரபாகரனுக்கு வடக்கு, கிழக்கு தாரை வார்க்கப்பட்டதன் அபாயகரமான முடிவுகளில் ஒன்றாக உஸாமா பின் லாதினை கிழக்குக்குக் கொண்டு வந்து சேர்ப்பது அமையும்.

அபாயகரமான நிலை முஸ்லிம்களது மிக விரைவான சனத் தொகைப் பெருக்கம் புதிய கல்வி மாற்றம், தமிழ் பாசிச யுத்தத்தாலும் ஐ.தே.க.வுக்கும் ஐ.ம.சு.கூ.க்கும் இடையிலான மோதலாலும் ஏற்பட்ட பலவீனம், எண்ணெய் பணத்தின் குமுறல் இவை அனைத்தினதும் முடிவு இலங்கையின் முஸ்லிம் அடிப்படைவாதத்தை, வெடிப்பதற்கு தயார்நிலையிலுள்ள எரிமலையைப் போன்றாக்கிவிட்டது. இலங்கை உளவுப் பிரிவின் தகவலின்படி தமக்கிடையில் மோதிக் கொள்ளும் 4 முஸ்லிம் ஆயுதக் குழுக்கள்

(11ஆம் பக்கம் பார்க்க...)

(முஜாஹிதீன், ஒஸாமா, ஜெட், பீம்)) இலங்கையில்; இருப்பதாகவும் அவர்களுக்கு சர்வதேச பயங்கரவாதிகளுடன் தொடர்பிருப்பதாகவும் அறிய முடிகிறது. ஒலுவில் பிரகடனம் என்பது அர்மில்லாததொன்றல்ல. அது இந்தோனேஸியாவையும் இலங்கையையும் சேர்த்துத் தீயிட்டுக் கொழுத்தி விடும். (பக்:281)

அடிப்படைவாதக் கலாசாலைகள்

இலங்கையில் முஸ்லிம் அடிப்படைவாதமானது மக்தப்கள், மத்ரஸாக்கள், இஸ்லாமிய முன்பள்ளிகள், முஸ்லிம் பாடசாலைகள், ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள், முஸ்லிம் பல்கலைக்கழகங்கள் ஆகிய இடங்களில் போதிக்கப்படுகின்றது. மத்ரஸாக்களைப் பொறுத்தவரையில் மக்கிய்யா, பாரீ, பஹ்ஜதுல் இப்றாஹீமிய்யா, கிண்ணியா சஹதிய்யா, மாதர அன்மின்னதுல் பாஸியா, மைதுல் அரபுப் பாடசாலை (தர்ஹாநகர்), காஸிமிய்யா, கபூரிய்யா என்பன குறிப்பிடத்தக்கவையாகும். இவை வெளிநாட்டு பணத்தால் வேகமாக நவீனமயப்பட்டு வருகின்றன. அங்கு ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆசிரியர்கள் கூட போதிக்கிறார்கள். 2003-2010ற்கும் இடையில் 700 மத்ரஸாக்களை நிர்மானிக்க சவுதி வாக்குறுதியளித்துள்ளது. பாடத்திட்டம் முழுக்க முழுக்க இஸ்லாமிய அடிப்படைவாதத்துடன் சம்பந்தப்பட்டிருக்கிறது. நளீம் ஹாஜியாரால் 1973ல் பேருவலையில் ஸ்தாபிக்கப்பட்ட ஜாமியா நளீமிய்யா அடிப்படைவாத கலாசாலை இங்கு மைல்கல்லாகும். வெளிநாடுகளைச் சேர்ந்த அடிப்படைவாத ஆசிரியர்களை சேவைக்கு அமர்த்தி, நவீன தொழினுட்பத்தை போதிக்கும் இடமாக அது மாறியுள்ளது. (பக்: 284,285)


1996ல் 111 அடிப்படைவாத முன்பள்ளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இலங்கையின் 5 பல்கலைக்கழகங்களில் இஸ்லாமிய நாகரிகத்துக்கான தனியான துறைகள்கள் உள்ளன. அஷ்ரப் 1995ல் தனியான முஸ்லிம் பல்கலைக்கழத்தை ஆரம்பித்ததுடன் இந்நிலை இன்னும் வேகமடைந்துள்ளது. நாட்டின் ஏனை பகுதிகளில் ஏற்படுத்தப்பட்ட சபரகமுவ, ரஜரட, ஊவா, வடமேல் பல்கலைக்கழகங்கள் இறுதி மூச்சுவாங்கும் போது இந்தப் பல்கலைக்கழகத்திற்கு மடைதிறந்த வெள்ளமாக வெளிநாட்டு உதவிகள் வந்து சேர்வதால் அது சீக்கிரமாக நவீன பல்கலைக்கழகமாக மாறியுள்ளது. இந்திய சுதந்திரப் போருக்கு அலிகார் பல்கலைக்கழகம் செய்த பங்களிப்பை விட கிழக்கின் சுய ராஜ்ய உருவாக்கத்திற்கு அதிகமான பங்களிப்பை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் செய்யும் என்பதை 2003 01 29 அன்று தென்கிழக்குப் பல்கலைக்கழக பூமியில் ஒலுவில் பிரகடனம் வெளியிடப்பட்ட நாளில் பேச்சாளர்கள் தெரிவித்திருப்பதாக அறிய முடிகிறது. அந்தவகையில் அது இன்று முஸ்லிம் அடிப்படைவாதத்தின் தொட்டில் என்பது தெளிவாகிறது. (பக்: 310)


வேகமாகப் பரவும் முஸ்லிம் சனத்தொகை

முஸ்லிம்களது சனத்தொகை அண்மைக்காலத்தில் அதிவேமாகப் பரவி வருகின்றது. மத்திய கிழக்கு நாடுகளுக்கு அவர்கள் செல்வதாலும் அதிகமாகத் திருமணங்கள் நடைபெறுவதாலும் இந்நிலை உருவாகியுள்ளது. சிங்களவர்களது வளர்ச்சி 1% ஆகும். அதேவேளை முஸ்லிம்களது வளர்ச்சி 2.8% ஆக இருக்கின்றது. 2090 ம் ஆண்டு முஸ்லிம்கள் இந்நாட்டின் பெரும்பன்மையினராக மாறுவார்கள். சிங்கள சமூகத்தில் இளைஞர்களது விதிசாரம் 16% ஆகும். அதேவேளை முஸ்லிம் சமூகத்தின் இளைஞர்களது விகிதாசாரம் 29% ஆகும். எனவே, பொதுவாக புரட்சிகளுக்கு இளைஞர்களே காரணமாக அமைகின்றனர் என்ற வகையில், முஸ்லிம் சமூகத்திலும் எதிர்காலத்தில் அடிப்படைவாதிகளது புரட்சி பலமடைவதற்கு இது வழிவகுக்கும். இலங்கையின் மொத்த சனத்தொகையில் பெண்களது தொகை ஆண்களது தொகையை விடவும் 1,77,961 மேலதிகமாக இருக்கிறது. இவர்களுள் 1,35,251 பேர் சிங்களப் பெண்களாவர். ஆனால் இந்தப் பெண்களை எதிர்காலத்தில் திருமணம் செய்வது யார்?. இவர்கள் ஒன்றில் முஸ்லிம் அல்லது வெளிநாட்டு ஆண்களையே முடிக்க வேண்டும். கடந்த காலத்தில் பலதார மணத்தின் மூலமே இஸ்லாம் இலங்கையில் பரவியது. (பக்:317)

பௌதர்களிடம் சிங்களத்தன்மை பற்றிய உணர்வில்லாமலுமிருப்பதனால் தான் அவர்கள் திட்டமிட்டுச் செயற்பாடாமல் இருக்கிறார்கள். இதனால் தான் சிறுபான்மை தீவிரவாதம் வளர்கிறது. சிங்களத்தன்மையைக் கொலை செய்கிறவர்கள் தான் இந்த சிறுபான்மைத் தீவிரவாதத்தின் வளர்ச்சிக்கு வழி சமைப்பவர்கள் என்பதை மறக்கலாகாது. அடுத்த தசாப்தங்களில் சிங்களவர்கள் தமது சிங்களத் தன்மையிலிருந்து எவ்வாறு செயல்படப் போகிறார்கள் என்பதைப் பொறுத்தே இலங்கையின் தலைவிதி தீர்மானிக்கப்படும். மகாத்மா காந்தி இலங்கையனின் மரணம் எம்மால் தாங்க முடியுமான கவலை. மாறாக இலங்கையின் மரணம் எம்மால் தாங்க முடியாத கவலை. என்று குறிப்பிட்டார். (பக்: 312)


இவரது நெகனஹிர சிங்கள உருமய (கிழக்கின் சிங்கள பூர்வீகம்)2002 எனும் நூலிலும் இது போன்ற கருத்துக்கள் உள்ளன.

இலங்கை முஸ்லிம்களது எதிர்காலம் பயங்கரமாக அமையும் சாத்தியக்கூறுகள் உள்ளன. என்ற நூலில் எந்த அடிப்படைகளுமற்ற, திரிபுபடுத்தப்பட்ட, வரலாற்று ஆதாரங்களற்ற, மிகைப்படுத்தப்பட்ட தகவல்கள் மாத்திரமே இருக்கின்றன. எனவே, இந்த நூல் சிங்கள சமூகத்திலுள்ள படித்தர்வர்கள், பல்கலைக்கழக மட்டதத்திலுள்ளவர்களாலும் படிக்கப்பட்டு வருவதால் முஸ்லிம்களைப் பற்றிய நல்லபிப்பிராயம் அவர்களது மனங்களிலிருந்து முற்றாக எடுபட்டு விட்டது. அத்துடன் அது வரலாற்று ஆவணமாகவும் மாறி எதிர்கால சிங்கள மக்களது உள்ளத்தில் நச்சு விதைகள் விதைக்கப்படுவதற்கும் காரணமாக அமையும்.

எனவே, இதுபோன்ற நூல்களுக்கு மறுப்பு எழுதப்பட வேண்டும். மற்றும் ஜாதிக ஹெல உருமய அரசியல் ரீதியாக தோற்கடிக்கப்பட வேண்டும். முஸ்லிம்கள் விழிப்பார்களா? இந்தத் தகவல்களை முஸ்லிம்களுக்கு மத்தியில் பரப்பும்படி அல்லாஹ்வுக்காக எதிர்பார்க்கிறோம்.. அல்லாஹ் எதிரிகளது சூழ்ச்சிகளிலிருந்து எம்மைப் பாதுகாப்பானாக.

நன்றிகள் -  யாழ் முஸ்லிம், நவமணி




Disqus Comments