பாலியல் தொழிலை இலங்கையில்
சட்டபூர்வமாக்குவது நல்ல விடயாமாகும்
என சமூக
அபிவிருத்திக்கான நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரியும் எழுத்தாளருமான
ஏறாவூரைச் சேர்ந்த
ஸர்மிலா செய்யித்
இன்று (20.11.2012) பீ.பீ.சீ தமிலோசைக்கு
வழங்கியபோட்டியின் போது தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பாலியல் தொழிலை
சட்டபூர்வமாக்குவதன் மூலம் சுற்றுலாத்துறையை
மேம்படுத்த முடியுமென தென்பகுதி மாகாண சபை உறுப்பினர்
அஜித் பிரசன்ன
என்பவர் அரசாங்கத்துக்கு
பரிந்துறை செய்துள்ள
நிலையில் இது
தொடர்பாக பீ.பீ.சீ தமிலோசை மேற்படி
ஸர்மிலாவை தொடர்பு
கொண்டு கேட்டபோதே
ஸர்மிலா மேற்
கண்டவாறு கூறியுள்ளார்.
இது தொடர்பாக இவர்
தொடர்ந்து கூறுகையில்
பாலியல் தொழிலை
ஊக்குவிப்பதன் மூலமே உல்லாசத்துறை மேம்படுத்த முடியும்
என்றார்.
உல்லாச துறையை ஊக்குவிப்பதற்காக
பாலியல் தொழிலை
சட்டபூர்வமாக மாற்றுவதென்பது நல்ல விடயமாக நான்
பார்க்கின்றேன். வேறு சில நாடுகளிலும் இந்த
நடைமுறை இருக்கின்றது.
பொதுவான அடிப்படையில்
பாலியல் தொழிலை
சட்ட பூர்வமாக்க
அந்த மாகாண
சபை கூறியுள்ள
காரணங்கள் சரியானவை
என நான்
பார்க்கின்றேன்.
இலங்கை பாரம்பரிய கலாசார
நாடு என்று
கூறப்பட்டாலும் கூட இலங்கையில் பாலியல் தொழில்
என்பது அதிகரித்து
வருகின்றது. சட்ட பூர்வ மாக்காமலே பாலியல்
தொழில்
அதிகரித்துள்ளது.
பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்குவதன்
மூலம் அது
எந்த ஒரு
பாதகத்தையும் ஏற்படுத்தாது என்று கருதுகின்றேன். இலங்கையில்
சுனாமிக்கு பின்னரான காலப்பகுதியில் இந்த பாலியல்
தொழில் என்பது
அதிகரித்து காணப்படுகின்றது.
நாட்டில் தற்போது நடைபெறும்
அபிவிருத்தியினால் வெளிநாட்டு பிரயைகளின்
வருகை இவைகளின்
மூலமும் இந்த
பாலியல் தொழில்
என்பது அதிகரித்து
வருகின்றது என்று மேற்படி ஸர்மிலா செய்யித்
தெரிவித்துள்ளார்.
மேற்படி ஸர்மிலா என்பவர்
கடந்த சில
தினங்களுக்கு முன்னர் கொழும்பில் “சிறகு முளைத்த
பெண்” என்ற
பெயரில் ஒரு
கவிதை நூலை
வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.