Monday, December 10, 2012

2013 ஜனவரி முதல் இணையத்தள சேவை வரி 50 வீதத்தால் குறைப்பு


“இணையத்தளம்” மற்றும் “ப்ரோட் பேண்ட்” (Broadband) சேவைகளுக்கான தொலை தொடர்பாடல் வரி எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் 50 சத வீதத்தால் குறைக்கப்படுமென தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் தலைவர் அனுஷ பல்பிட்ட தெரிவித்தார்.

இதன்படி, பாவனையாளர்கள் தாம் செலுத்த வேண்டிய கட்டணம் அரை வாசியாக குறைவடையுமெனவும் அவர் கூறினார். 2013 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதன்படியே இணையத்தளம் மற்றும் ப்ரோட்பேன்ட் சேவைகளுக்கான தொலைத் தொடர்பாடல் வரி 50 சதவீதத்தால் குறைக்கப்பட விருப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.

இலங்கையில் தற்போது 1.2 மில்லியன் பேர் ப்ரோட்பேன்ட் சேவைகளை உபயோகிக்கின்றனர்.

இந்த எண்ணிக்கையை 2015 ஆம் ஆண்டளவில் 30 இலட்சமாக அதிகரிப்பதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் இலக்காகும்.

இதனைக் கருத்திற் கொண்டே பாவனையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் இச் சேவைக்கான வரி குறைக்கப்படவுள்ளதெனவும் அவர் கூறினார்.
Disqus Comments