Saturday, December 8, 2012

மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது பங்களாதேஷ் வரலாற்றுச் சாதனை

தற்போதனைய உலக 20க்கு 20 ஜாம்பவான் மேற்கிந்தியத் தீவுகளுடனான ஒருநாள் தொடரின் 5ஆவது போட்டியில் வெற்றியீட்டியதன் மூலம் பங்களாதேஷ் அணி 3:2 என்ற விதத்தில் தொடரைக் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

டுவன்டி டுவன்டி உலகச் சம்பியனான மேற்கிந்தியத் தீவுகள் அணியை வீழ்த்தி ஒருநாள் தொடரைக் கைப்பற்றியதன் மூலம் கிரிக்கெட் உலகின் கவனத்தை தன்பக்கம் ஈர்த்துள்ளது பங்களாதேஷ்.

இன்று மிர்பூரில் இடம்பெற்ற 5ஆவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 48 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 217 ஓட்டங்களைப் பெற்றது.

பொல்லார்ட் 74 பந்துகளுக்கு 85 ஓட்டங்களையும் பிராவோ 108 பந்துகளுக்கு 51 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் சபீயுல் இஸ்லாம் 31 ஓட்டங்களைக் கொடுத்து 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 44 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்தநிலையில் 221 ஓட்டங்களைப் பெற்று வெற்றியைத் தனதாக்கிக் கொண்டது.

பங்களாதேஷ் அணி சார்பில் மஹ்மூதுல்லாஹ் 48 ஓட்டங்களையும் முஷ்பிகுர் ரஹ்மான் 44 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். பந்துவீச்சில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ரோச் 9 ஓவர்களுக்கு 56 ஓட்டங்களைக் கொடுத்து 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

இன்றைய போட்டியின் ஆட்ட நாயகனான மஹ்மூதுல்லாஹ்வும் தொடரின் சிறப்பாட்டக்காரராக பங்களாதேஷ் அதித் தலைவா் முஷ்பிகுர் ரஹ்மானும் தெரிவு செய்யப்பட்டனர்.




Disqus Comments