மதுரங்குளி என்றாலே தும்புமோல் (தும்புத் தொழிற்சாலை) தான் பிரபல்யம். இந்த தும்புத் தொழிற்சாலைகள் ஊா் மக்களுக்கு கூலிவேலையாக இருந்தாலும் வேலைவாய்ப்புக்களை வழங்கி வருகின்றது. ஊா் மக்களுக்கு மட்டுமன்றி வெளிப் பிரதேசங்களை சோ்ந்த மக்களும் உதாரணமாக மலைநாட்டைச் சோ்ந்த மக்கள் இங்கு வந்து தொழில்வாய்ப்புக்களைப் பெற்றிருப்பது பண்கூடு. அதே போன்ற தோரணையில் நடைபெற்றது தான் இந்த கொளை்ளைச் சம்பவம்.
மதுரங்குளி கடையாமோட்டை இயங்கிவரும் ஒரு தும்புத் தொழிற்சாலையில் நடைபெற்றது தான் இந்தச் சம்பவம். மேற்படி தும்புத் தொழிற்சாலையின் அருகில் தான் உரிமையாளரின் வீடும் அமைந்துள்ளது. அவரது தொழிற்சாலையில் வேற்று ஊரைச் சேர்ந்த ஒரு குடும்பம் மேற்படி தொழிற்சாலையில் சுமார் ஒரு மாதகாலமாக பணியாற்றி வந்ததோடு உரிமையாளா் அவரது வீட்டுக்கு பக்கத்திலேயெ அவா்கள் தங்கி இருப்பதற்கான வசதியையும் செய்து கொடுத்திருக்கின்றார். அவா்கள் இந்த உரிமையாளரிடம் அடையாள அட்டையைக் கூட காண்பிக்கவில்லை என்பதாக அங்கிருந்து கிடைக்கப்பெறும் செய்திகள் தெரிவிக்கின்றன.
விடுமுறை தினமான கடந்த ஞாயிற்றுக்கிழமை குறித்த அந்த பணியாளர் தனது பிள்ளையின் பிறந்த நாள் வைபவம் என்று சொல்லி சிறியதொரு ஏற்பாடு செய்திருக்கின்றார். அதில் கேக், வாழைப்பழம், மற்றும் ஜூஸ் என்று சிற்றூண்டிகளுடன் மாலை 5.30 மணியளவில் முதலாலியின் வீட்டுக்கு கொண்டு போய் கொடுத்திருக்கின்றார்.
விடயம் அறியாத அந்த தொழிற்சாலை உரிமையாளரும் அதை வாங்கி கடி பண்டளங்களைக் கடித்து குடி பாணங்களை குடித்திருக்கின்றார். அவ்வளவுதான் அவா் தனது குடும்பத்துடன் கண் விழித்தது அடுத்த நாள் திங்கட் கிழமை தான்.
நடந்த சம்பவம் என்ன வென்றால் அந்த பணியாளர் கொடுத்த ஜூஸ் பானத்தில் துாக்க மாத்திரை கலந்து கொடுத்து விட்டு வீட்டிலிருந்த பணம், பொருள் நகை எல்லாவற்றையும் சுருட்டிக்கொண்டு அவர்கள் தலை மறைவாகிவிட்டார்களாம்.
இந்த பணியாளா் கடந்த ஒரு மாத காலம் வேலை செய்த போது மிகவும் பொறுப்பானவராகவும், கடமை தவராதவராகவும் தன்னைக் காட்டிக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வேற்றூா் வாசிகளை குறைந்த சம்பளம் கொடுத்து வைத்திருக்கும் அனைத்து தும்புத் தொழிற்சாலை உரிமையாளா்களுக்கும் சிறந்த படிப்பினையாகும்.