பெருக்குவட்டான் ஜும்மா பள்ளி மற்றும் ஊர் மக்களின் ஏற்பாட்டின் பேரில் உலமாக்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை மாலை ஜும்ஆப் பள்ளி முன்றலில் வெகு விமர்சையாக நடைபெற்றது. பெருக்குவட்டான் மஹல்லாவைச் சேர்ந்த அதாவது பெருக்குவட்டான் ஜும்ஆப் பள்ளியில் தமது ஆரம்ப குர்ஆன் ஷரீபை கற்று பின்பு வேறு கலாசாலைக்குச் சென்று பட்டம் பெற்ற ஆலிம்கள், ஆலிமாக்கள் மற்றும் ஹாபிழ்கள் போன்றோர் இவ்வாறு கௌரவிக்கப்பட்டனர். இதில் 14 ஆலிம்கள், 22 ஆலிமாக்கள், மற்றும் 9 ஹாபிழ்கள் உள்ளடங்குவதாக ஜும்ஆப் பள்ளியின் இமாம் மௌலவி அபூபக்கர் அவர்கள் ரெட்பானா செய்திகளுக்குத் தெரிவித்தார். மேலும் இது சம்மந்தமாக அவர் கருத்து தெரிவிக்கும் போது மக்களை நல் வழியில் நடத்த தன்னையே அர்ப்பணம் செய்யும் இந்த உலமாக்கள் பணி மகத்தானது எனவும் இவர்கள் கண்ணியத்திற்கும், மதிப்பிற்கும் உரியவர்கள் எனவும் இவர்களது சேவைகளை பாராட்டியே இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
இந்த உலமாக்களை பாராட்டும் நிகழ்வில் அக்குரனை அரபுக் கலாசானையின் அதிபர் மௌலவி ஜவாஹிர் (ஹாஷ்மி, தேவ்பந்) அவர்கள் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றினார்கள். இந்த நிகழ்வானது மாலை அஸர் தொழுகையைத் தொடர்ந்து ஆரம்பமாகி இஷா தொழுகையுடன் நிறைவு பெற்றதாக அங்கிருந்து கிடைக்கக் கூடிய தகவல்கள் தெரிவிக்கின்றன.