Friday, December 14, 2012

தொடா்ந்தோ்ச்சியாக கொட்டும் நட்சத்திரங்கள்

இன்று 13.12.2012 ம் திகதி இரவு வின்மீன்கள் அதாவது எரிகற்கள் வளமைக்கு மாறாக பாரிய அளவில் வானத்தில் இருந்து கொட்டுவதை அவதானிக்க முடிந்தது. இது வளமைக்கு மாறான செயற்பாடாகும். வளமையாக எம்மால் ஓரிரு எரிகற்களைத் தான் காண முடியும். ஆனால் இன்று இரவு தொடா்ந்து மழை பெய்வதைப்போல் வின்மீன்கள் கொட்டுவதை அவதானிக்க முடியுமாக இருந்தது. இது அண்மைக்கால மாக ஏற்பட்டுவரும் அசாதாரண காலநிலையின் வெளிப்பாடு என்பதாகவும், ஒரு வேளை மீண்டும் ஒரு சுனாமிக்கான அறிகுரியா? என்றும் நேரில் கண்டவா்கள்  தங்களுக்குள் கதைத்துக் கொண்டிருந்ததை காண முடிந்தது. எது எவ்வாறாயினும் இது ஒரு அசாதாரண சூழ்நிலையின் ஒரு அங்கமாகவே பார்க்கப்பட வேண்டும். ஏன் என்றால் நாட்டில் அண்மையில் ஏற்பட்ட சிவப்பு மழை விவகாரம், அம்பாறையில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஆகியவை போன்றுதான் இதுவும் காட்சியளிக்கின்றது.
Disqus Comments