Friday, December 14, 2012

உலகின் முதலாவது கமராவும் எடுக்கப்பட்ட முதல் படமும்!

இன்று கமரா பயன்படுத்தாதவா்களைக் காட்ட முடியுமா? முடியவே முடியாது. அவர்களை விட்டு விடுவோம், கமரா உருவான வளர்ந்து வந்த பாதையை சற்று கவனிப்போம்.

பிறப்பிலேயே கண்களால் அழகை ரசித்தவன் பின்னாளில் அதே கண்களுக்கும் காட்சிக்கும் நடுவில் ஒரு பொருளை வைத்து கண்டகாட்சியை பதிவு செய்கிறான் அது தான் கமரா.

உலகின் முதலாவது கமரா 1827 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது Joseph Nicphore Nipce என்ற பிரெஞ்சு படப்பிடிப்பாளர் இதை உருவாக்கினார், முதலாவது படம் இரும்பு தகட்டில் பதியப்பட்டது. 1824 ஆம் ஆண்டு முற்றாக நிறைவு பெறாத கமராவில் எடுக்கப் பட்ட படமே இன்னமும் முதலாவது படமாக வரலாற்றில் இடம் பெற்றிருக்கிறது.

Disqus Comments