Tuesday, May 7, 2013

மூன்றரை வயது குழந்தை பாலியல் துஷ்பிரயோகம் - 14 வயது சந்தேக நபர கைது !(இலங்கையில் சம்பவம்)

(AD)14 வயது சந்தேக நபர் ஒருவரால் தமது மூன்றரை வயது மகள் பாலியல் துஷ்ப்பிரயோகம் செய்யப்படடுள்ளதாக நோர்ட்டன் பொலிசில் இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நோர்ட்டன் பொலிஸ் பிரிவுக்கட்பட்ட தெப்பட்டன் தோட்டத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படகிறது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, தெப்பட்டன் தோட்டத்தில் வசித்துவரும் குறித்த பெற்றோர்களின் மூன்றரை வயது பிள்ளையினை அதே தோட்டத்தைச்சேர்ந்தவரும் ஒரே லயனில் வசிப்பவருமான பாடசாலை செல்லும் மாணவன் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியிருப்பதாக நோர்ட்டன் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இம்முறைப்பாட்டினைத்தொடர்ந்து குறித்த மாணவண் சந்தேகத்தின்பேரில் நோர்ட்டன் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவத்தில் பாதிக்கப்பட்டிருப்பதாக கருதப்படும் தெப்பட்டன் தோட்ட சிறுமி நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்படடிருப்பதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தாம் மேற்கொண்டு வருவதாகவும நோர்ட்டன் பொலிசார் தெரிவிக்கின்றனர்
Disqus Comments