(TM) இலங்கையிலிருந்து 2,800 பேர் மாத்திரமே இந்த வருடம் ஹஜ் யாத்திரையினை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹஜ் யாத்திரை தொடர்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று சவூதி அரேபியாவில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் ஹஜ் விவகாரங்களுக்கான சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி மற்றும் சவூதி அரேபிய ஹஜ் விவகார அமைச்சர் ஆகியோர் கைச்சாத்திட்டுள்ளனர்.
சவூதி அரேபியாவிலுள்ள புனித நகரங்களான மக்கா மற்றும் மதீனா ஆகிய பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் காரணமாக இலங்கையிலிருந்து 2,800 யாத்தீரிகர்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் பௌசி தெரிவித்துள்ளார்.
கடந்த 2012ஆம் ஆண்டும் 2,800 பேர் மாத்திரமே இலங்கையிலிருந்து வருடம் ஹஜ் யாத்திரையினை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.