Sunday, June 16, 2013

வட மேல் மாகாண சபை உறுப்பினரான ஆனந்த சரத்குமார பொலிஸாரால் கைது

வட மேல் மாகாண சபை உறுப்பினரான ஆனந்த சரத்குமார, நவகத்தேகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

வடமேல் மாகாண சபை உறுப்பினரான அனந்த சரத் குமார, பாடசாலை ஆசிரியை ஒருவரை நேற்று முழங்காலில் நிறுத்தி தண்டனை வழங்கியுள்ளார். 
குறித்த ஆசிரியை, பாடசாலை மாணவி ஒருவருக்கு சீருடை தொடர்பாக எச்சரித்துள்ளார். இதுகுறித்து குறித்த மாணவி அவரது தந்தையான மாகாண சபை உறுப்பினரான அனந்த சரத்குமாரவிடம் கூறியுள்ளார். 

இனையடுத்து பாடசாலைக்குச் சென்ற மாகாண சபை உறுப்பினர், குறித்த ஆசிரியையை பாடசாலைக்குள்ளேயே முழங்காலில் நிறுத்தி தண்டனை வழங்கியுள்ளார் என்று தெரிவிக்ப்படுகிறது. இதனை தொடர்ந்து ஆசிரியை நவகத்தேகம பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Disqus Comments