இலங்கையில் அதி நவீன வசதிகளுடன் சிறைச்சாலை ஒன்று ஹம்பாந்தோட்டை அகுனுகொலபெலஸ்ஸ பகுதியில் குறித்த ஆடம்பரமான சிறைச்சாலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
குறித்த சிறைச்சாலையினை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ காலத்தில் அமைக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தற்போது குறித்த சிறைச்சாலை தொடர்பிலும் மக்கள் மத்தியில் விமர்சணங்களை எழச் செய்துள்ளது.
குறிப்பாக, 58 ஏக்கர் நிலப்பரப்பில், 500 கோடி ரூபா செலவில் கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் திகதி இந்த கட்டட பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.
இவ்வாறு பல கோடி மதிப்பில் குறித்த சிறைச்சாலையை மஹிந்த அமைக்க கரணம், "ஊழல் மோசடிகள் தொடர்பில் பிற்காலத்தில் கைது செய்யப்பட்டால் சொகுசாக வாழலாம் என்பதற்காகவா ? " என சமூக வலைத்தளங்களில் மக்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றார்கள்.
"இவ்வாறு சிறையில் பல குற்றச்செயல்களை செய்து இருக்கும் குற்றவாளிகளுக்கு எதற்காக இந்த ஆடம்பரம் " என்றும் " "கோடிகளை இவ்வாறு செலவழித்து விட்டு தற்போது வெளிநாடுகளிடம் வளங்களை கொடுப்பதாக மஹிந்த கூறுவது எந்த விதத்தில் நிஜாயம் " என சமூக ஆர்வலர்கள் அதிருப்தியை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.