Tuesday, February 14, 2017

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி அமைந்தால் 72 மணித்தியாலங்களுக்குள் ரணிலை கைது செய்வோம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அரசாங்கம் நிறுவப்பட்டு 72 மணித்தியாலங்களுக்குள் தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை கைது செய்வதாக கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நிறுவப்படும் அரசாங்கத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்படாவிட்டால் தான் அந்த அரசாங்கத்தில் இருந்து விலகுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உறையற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Disqus Comments