பாகிஸ்தான் லாஹூரில் இன்று இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 07 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆர்ப்பாட்டம் ஒன்றுக்காக மக்கள் கூடியிருந்த வேளையிலேயே இந்த குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது. இந்த குண்டு வெடிப்பால் பொலிஸ் அதிகாரிகளும் கொல்லப்பட்டிருக்கலாம் என அந்த செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
இதேவேளை, குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்கள் கங்கா ராம் வைத்திய நிலையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
குண்டு வெடிப்புக்கான கரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்பதுடன் இன்னும் காயமடைந்தவர்கள் இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.