Tuesday, February 14, 2017

வவுனியா சதொச நிறுவனத்திற்கு அமைச்சர் றிஷாட் திடீர் விஜயம்!

வவுனியாவுக்கு இன்று (13) விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன், வவுனியா லங்கா சதொச நிறுவனத்திற்கும் திடீர் விஜயம் செய்திருந்தார்.

வாடிக்கையாளர்களுக்கு எந்தத் தட்டுப்பாடுமின்றி அரிசியையும் மற்றும் ஏனைய பொருட்களையும் விநியோகிப்பது தொடர்பில் அங்குள்ள ஊழியர்களுக்கு அறிவுறுத்தினார்.

அரசாங்கம் அரிசிக்கு நிர்ணயித்த விலையை விட அதிகமாக விற்பனை செய்யும்  வியாபாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.





Disqus Comments