Saturday, August 24, 2013

வானியல் கணிப்­பீ­டு­களைப் பயன்­ப­டுத்­து­வது இஸ்­லா­மிய ஷரீ­ஆவில் ஏற்­பு­டை­ய­தா­குமா?

அஷ்-ஷெய்க் யூ.கே. அப்­துர்­ரஹீம் (நளீமி)
இம்­முறை ஷவ்வால் தலைப்­பிறை இலங்கை வாழ் முஸ்லிம் உம்­மத்தை நன்­றா­கவே கலக்கி விட்­டது. ஒற்­றுமை மிகவும் அவ­சி­யப்­பட்டு நிற்கும் ஒரு சந்­தர்ப்­பத்தில் இத்­த­கைய குழப்­ப­நிலை ஏற்­பட்­டது மிகவும் கவ­லைக்­கு­ரி­யது. எமது ஐக்­கி­யத்­தையும் சகோ­த­ரத்­து­வத்­தையும் பலத்­தையும் பெரும்­பான்மைச் சமூ­கங்­க­ளுக்கு முன்னால் காட்டி பெரு­மி­தப்­பட்டு நிற்க வேண்­டிய ஒரு நாளில் நாம் சின்­னா­பின்­னப்­பட்டுப் போய் நிற்­கிறோம். தொடர்ந்து இந்த சமூ­கத்­துக்குள் எவ்­வ­ளவு வாதப்­பி­ர­தி­வா­தங்­களும் பரஸ்­பரக் குற்­றச்­சாட்­டுக்­களும் நிகழ்ந்­தேறிக் கொண்­டி­ருக்­கின்­றன என்­பதும் நமக்குத் தெரிந்த விட­யங்­களே. எமது சமூகம் தன் ஒற்­று­மையை வெளிப்­ப­டுத்த வேண்­டிய நாளில் சுக்கு நூறாகிப் போன­தற்­கான மூல கார­ணத்தை ஆராய்­வதே இக்­கட்­டு­ரையின் நோக்­க­மாகும்.
பிரச்­சி­னையின் மூல­கா­ரணம்

இம்­முறை ஏற்­பட்ட பிறைக்­கு­ழப்­பத்­திற்­கு­ரிய மூல­கா­ர­ணமே கடந்த 2006ம் ஆண்டு அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மாவின் சார்­பிலும் பிறைக்­கு­ழுவின் சார்­பிலும் ஏக­ம­ன­தாக(?) எடுக்­கப்­பட்­ட­தாகக் கூறப்­படும் தீர்­மா­னங்­களில் உள்ள மூன்­றா­வதும் ஐந்­தா­வ­து­மான தீர்­மா­னங்­கள்தான். 
இத் தீர்­மா­னங்­க­ளின்­படி கடந்த 2013.08.07 ஆம் திக­தி­யன்று தலைப்­பிறை வெற்றுக் கண்­க­ளுக்கு தென்­ப­டாது என்ற தமது நம்­பிக்­கைக்­கு­ரிய வானிலைக் கணிப்­பீட்­டா­ளர்­களின் கணிப்­புக்­கேற்ப முன் தீர்­மா­னத்­தி­லி­ருந்த பிறைக் குழு, தமது அந்த முன் கணிப்­புக்கு மாற்­ற­மான வகையில் பிறை கண்ட சாட்­சி­யங்கள் வரத் தொடங்­கி­யதும் அவற்றை எப்­ப­டியோ நிரா­க­ரித்தே ஆக வேண்டும் என்­பதில் விடாப்­பி­டி­யாக நின்­ற­து. இத­னா­லே­யே பின்னர் நிகழ்ந்த அவ்­வ­ளவு பிரச்­சி­னை­களும் தடு­மாற்­றங்­களும் அமை­தி­யாக நோன்பைப் பூர்த்தி செய்யும் ஆவ­லுடன் இருந்த அந்த சமூ­கத்­துக்குள் நிகழ்ந்­தே­றின. எனினும் அந்தக் குழப்­பங்­க­ளினால் எமக்குக் கிடைத்த ஒரே­யொரு நன்மை என்­ன­வெனில் பிறைக்­கு­ழுவின் அந்த ஐந்து தீர்­மா­னங்­க­ளையும் வெளிப்­ப­டை­யாக அறிந்து கொள்ளக் கிடைத்­த­மைதான்.
இஸ்­லா­மிய ஷரீ­ஆ­வுக்கு முர­ணான தீர்­மானம் 

பிறைக்­கு­ழுவின் மூன்­றா­வது தீர்­மானம் இவ்­வாறு அமைந்­துள்­ளது:
'ஒரு நாளில் பிறை வெற்றுக் கண்­க­ளுக்குத் தென்­ப­டு­வது சாத்­தி­ய­மற்­றது என நம்­ப­க­மான முஸ்லிம் வானியல் அறி­ஞர்கள் உறுதி செய்­யு­மி­டத்து வானி­யலின் அடிப்­ப­டை­யான அந்­நி­லைப்­பாடு ஏற்றுக் கொள்­ளப்­ப­டு­வ­தோடு அதன் அடிப்­ப­டையில் அன்­றைய தினம் பிறை காணாத நாளாகக் கொள்­ளப்­படும்' 

பிறைக்­கு­ழுவின் இந்த மூன்­றா­வது விதியை விளக்கும் வகையில் அதன் ஐந்­தா­வது தீர்­மானம் அமைந்­துள்­ளது. அதா­வது:

'பிறை வெற்றுக் கண்­க­ளுக்குத் தெரி­வது அசாத்­தியம் எனத் தெரிவு செய்­யப்­பட்ட நாளில் ஒருவர் அல்­லது பலர் பிறை கண்­ட­தாகக் கரு­தினால் அவரோ அல்­லது அவர்­களோ தலை­மை­ய­கத்­துக்குக் கட்­டுப்­படல் என்ற வகை­யிலும் முஸ்லிம் சமூ­கத்­துடன் இணைந்து செயற்­படல் என்ற வகை­யிலும்  குறித்­த­நாளில் நோன்பு நோற்­ப­தற்வோ பெரு­நாளைக் கொண்­டா­டு­வற்கோ பிறரை விண்­டவோ பிர­க­ட­னப்­ப­டுத்­தவோ கூடாது. தனிப்­பட்ட முறையில் அவரோ அல்­லது அவர்­களோ பிறை­யைக்­கண்ட அடிப்­ப­டையில் செயற்­படும் அனு­ம­தியைப் பெறுவர்.

பிறைக்­கு­ழுவின் மேற்­படி இரு விதி­க­ளையும் பார்க்கும் போது நமக்குத் தெளி­வா­வது யாதெனில் 'பிறை வெற்­றுக்­கண்­க­ளுக்குத் தெரி­யுமா தெரி­யாதா என்­பதைத் தீர்­மா­னிப்­பது நம்­ப­க­மான முஸ்லிம் வான­வி­ய­லா­ளர்­க­ளாவர். அவர்கள் அப்­படித் தீர்­மா­னித்து விட்டால் அந்­நாளில் யார் பிறை கண்­டாலும் எத்­த­னைபேர் பிறை­கண்­டாலும் அவர்கள் எவ்­வ­ள­வுதான் நம்­பிக்­கை­யுள்­ள­வர்க­ளாக இருந்­தாலும் அவர்­களின் சாட்­சியம் நிரா­க­ரிக்­கப்­படும். வேண்­டு­மானால் அவர்கள் மட்டும் அவர்கள் கண்ட பிறைப்­படி செயற்­ப­டலாம்' என்­ப­துதான்.

பிறைக்­கு­ழுவின் இந்தத் தீர்­மா­னங்கள் நபி­ய­வர்­களின் தெளி­வான சுன்­னா­வுக்கும் கண்­ணியம் மிக்க ஸஹா­பாக்கள், ஸல­புஸ்­ஸா­லி­ஹீன்கள், அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமா­ஆவைச் சேர்ந்த இமாம்­களின் ஏகோ­பித்த முடி­வுக்கும் முற்­றிலும் முர­ணா­னது என்­பதை இங்கு பணி­வுடன் சுட்­டிக்­காட்ட வேண்­டி­யுள்­ளது. 

நபி(ஸல்) அவர்கள் பிறை சம்­பந்­த­மாகத் தீர்­மானம் செய­்வதில் எவ்­வாறு நடந்து கொண்­டார்கள் என்­பதை ஹதீஸ் கிரந்­தங்­களில் தேடிப் பார்க்கும் ஒருவர் அன்­றைய மனி­தர்கள் சொல்லும் நம்­ப­க­மான சாட்­சி­யங்­களை ஏற்­றுக்­கொண்­டி­ருக்­கி­றார்கள் என்­பதை இல­கு­வாக விளங்கிக் கொள்வார். சில­போது அறி­மு­க­மில்­லாத கிரா­மப்­புற மனிதர் ஒரு­வர்தான் வந்து பிறை­கண்ட செய்­தியைச் சொன்­னாலும் கூட 'நீ அல்லாஹ் ஒரு­வன்தான் என சான்று பகர்­கி­றாயா? முஹம்மத் அல்­லாஹ்வின் தூதர் என சான்று பகர்­கி­றாயா?' எனக் கேட்டு விட்டு அவர் கூறி­யதை ஏற்றுக் கொண்­டுள்­ளார்கள். அபூ­தாவுத், திர்­மிதி, நஸாஈ, இப்­னு­மாஜஹ், தாரமி முத­லிய ஹதீஸ் கிரந்­தங்­களில் இத்­த­கைய ஸஹீ­ஹான ஹதீஸ்­களை நாம் காணலாம். இந்த அடிப்­ப­டை­யில்தான் எமது இமாம்கள், பிறை கண்­டதை நம்­ப­க­மான ஒருவர் அல்­லது இருவர் உறு­திப்­ப­டுத்­தினால் ஏற்றுக் கொள்­ளப்­படும் என்ற முடி­வுக்கு வந்­தார்கள். இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் ஆரம்­பத்தில் நம்­ப­க­மான ஒருவர் கண்­டாலும் போதும் என்ற கருத்தைக் கொண்­டி­ருந்­தார்கள்.எனினும் பின்னர் நம்­ப­க­மான இருவர் தேவை என்­கி­றார்கள். இங்கு ஹதீஸ்­களின் அடிப்­ப­டையில் கண்ணால் காண்­பதை வைத்தே செயற்­ப­டச்­சொல்லும் இமாம் அவர்கள் வானிலைக் கணித்­தலை நிரா­க­ரிக்­கி­றார்கள். ( பார்க்க கிதாபுல் உம்மு, பாகம் 3 பக்: 232-233) 

வானியல் அடிப்­ப­டை­யி­லான கணித்­தலை வைத்து இன்று பிறை தெரி­வது சாத்­தி­ய­மில்லை என்ற முடி­வுக்கு வரு­வதும் அதன் அடிப்­ப­டையில் கண்ணால் கண்ட சாட்­சி­யங்­களை நிரா­க­ரிப்­பதும் இஸ்­லா­மிய ஷரீ­ஆ­வுக்கு முற்­றிலும் முர­ணா­னது என்­பது ஒன்றும் எனது சொந்தக் கருத்தோ அல்­லது புதிய கருத்தோ அல்ல. அஹ்லுஸ் சுன்­னாக்­களால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட மிகப் பெரும்­பா­லான இமாம்­களின் கூற்­றின்­படி அது ஸஹா­பாக்­க­ளி­னதும் ஸல­புஸ்­ஸா­லி­ஹீன்­க­ளி­னதும் இஜ்­மா­வான முடி­வாகும். இது சம்­பந்­த­மான சில முக்­கிய இமாம்­களின் கூற்றை இங்கு சுட்­டிக்­காட்­டு­வது பொருத்­த­மாகும்.

 ஸஹீஹுல் புகா­ரி­யி­லுள்ள இப்னு உமர் (ரழி) அவர்கள் அறி­விக்கும் 'நிச்­ச­ய­மாக நாம் எழு­தாத கணிப்­பி­டாத சமூ­க­மாவோம். மாதம் என்­பது இப்­படி இப்­ப­டித்தான். அதா­வது ஒரு­த­டவை இரு­பத்­தொன்­பது இன்­னொரு தடவை முப்­பது.(இவ்­வாறு நபி­ய­வர்கள் மூன்று முறை கூறி­ய­தா­கவும் அவற்றுள் இரு ­த­டவை தமது இரு­ கை­வி­ரல்­க­ளையும் பூர­ண­மாக விரித்துக் காட்­டி­ய­தா­கவும் மூன்­றா­வது தடவை பெரு­வி­ரலை மடித்­துக்­காட்டி இரு­பத்­தொன்­ப­தாக சைகை செய்­த­தா­கவும் இரு­பத்­தொன்­ப­தா­வது நாள் பிறை தென்­ப­டாது மறைத்து விட்டால் மாதத்தை முப்­ப­தா­கப்­பூர்த்தி செய்­யு­மாறும் நபி­ய­வர்கள் கூறி­ய­தாக புகா­ரி­யிலும் முஸ்­லி­மிலும் உள்ள ஏனைய ஹதீஸ்­களில் உள்­ளது)  

இந்த ஹதீ­ஸுக்கு இமாம் இப்னு ஹஜர் அல் -அஸ்­க­லானி(ரஹ்) அவர்கள் அளித்­துள்ள விரி­வு­ரையில் கூறு­வ­தா­வது: 'பிறையைக் கணிப்­பீடு செய்­யாமல் -அவ்­வாறு கணிக்கத் தெரிந்­த­வர்கள் பிற்­கா­லத்தில் தோன்­றி­னாலும் கூட கண்ணால் பார்த்துத் தீர்­மா­னிப்­பதே தொடர்ந்­தி­ருக்கும் சட்­ட­மாகும். மேலும் ஹதீஸின் தெளி­வான வச­னப்­போக்கும் பிறை­பார்த்­தலில் வானிலைக் கணித்­தலை மறுக்­கி­றது. ஏனெனில் இதற்கு முந்­திய ஹதீஸில் நபி­ய­வர்கள் கூறு­கி­றார்கள் '  உங்­க­ளுக்கு பிறை தெரி­யாமல் மறைத்­து­விட்டால் மாதக் கணிப்­பீட்டை முப்­ப­தா­கப்­பூர்த்தி செய்­யுங்கள்'. மாறாக நபி­ய­வர்கள் சொல்­ல­வில்லை 'நீங்கள் கணிப்­பீடு தெரிந்­த­வர்­களைக் கேளுங்கள்' என்று றாபி­ழாக்­களைத் தவிர (ஷீஆக்­க­ளில்­மி­க­வும்­வ­ழி­கெட்­ட­பி­ரிவு)   வேறு எவரும் பிறையை வானி­லைக்­க­ணிப்­பீ­டு­களின் அடிப்­ப­டையில் தீர்­மா­னிப்­ப­வர்­க­ளாக இருக்­க­வில்லை. பின்­வந்த சில புக­ஹாக்கள் இதற்கு சார்­பாகக் கருத்துத் தெரி­வித்­தார்கள் என்று கூறப்­ப­டு­கின்­றது.

எனினும் பிறை விட­யத்தில் வானிலைக் கணிப்­பீட்டை மேற்­கொள்ளக் கூடாது என்­பதில் ஸல­புஸ்­ஸா­லி­ஹீன்கள் கொண்­டுள்ள இஜ்­மா­வான முடிவு அத்­த­கை­யோ­ருக்கு எதி­ரான தகுந்த ஆதா­ர­மாக அமைந்து விடு­கி­றது. இமாம் இப்னு பஸீஸா சொல்­கிறார் அது ( பிறையை வானியல் அடிப்­ப­டையில் கணிப்­பி­டு­வது) பாதி­லான மத்­ஹ­பாகும். ஏனெனில் நட்­சத்­தி­ரங்­களின் அசைவில் மூழ்­கிப்போய் தீர்­மானம் எடுப்­பதை ஷரீஅத் தடுத்­துள்­ளது. ஏனெனில் அது அனு­மா­ன­மாகும்.அதில் உறு­தி­யான நிலைப்­பாடு கிடை­யாது.

இமாம் இப்னு பத்தால் சொல்­கிறார்: இந்த ஹதீஸ் நட்­சத்­தி­ரங்­களின் அசைவு ஓட்­டத்தை வைத்து பிறையைக் கணிப்­பதை இல்­லாமற் செய்து விடு­கி­றது. இதன்­படி பிறையைத் தீர்­மா­னிப்­பதன் அடிப்­ப­டை­ஆ­தா­ர­மாக அமை­வது பிறையைக் கண்ணால் காண்­ப­துதான். ஏனெனில் யூகமே வானிலைக் கணித்­தலின் அடிப்­படை என்ற வகையில் இதில் அள­வுக்கு மீறி எம்­மைச்­சி­ர­மப்­ப­டுத்திக் கொள்­வது என்­பது உள்­ளது. இதனை விட்டும் நாம் தடுக்­கப்­பட்­டுள்ளோம்.   (விரி­வான விளக்­கத்­துக்குப் பார்க்க: ஸஹீ­ஹுல்­பு­கா­ரியின் விரி­வு­ரை­யான பத்­ஹுல்­பாரி)
வானியல் கணிப்­பீடு பற்­றிய இமாம் இப்னு தைமிய்­யா­வின்­க­ருத்து:

பிறை­பார்த்தல் பற்­றியும் அதனைத் தீர்­மா­னிப்­பது பற்­றியும் அதில் வானிலை கணிப்­பீட்­டா­ளர்­களின் கருத்­துக்­களை ஏற்றுக் கொள்­ள­லாமா என்­பது பற்­றியும் எழும்; அநே­க­மான சந்­தே­கங்­க­ளுக்கு மிக விரி­வான பதில்­களை குர்ஆன்,ஹதீஸ்­களின் அடிப்­ப­டையில் வழங்­கி­யுள்­ள­வர்கள் இமாம் இப்­னு­தை­மிய்யா அவர்­க­ளாவர். அவர்­களின் பதாவா தொகுப்பில் 25வது பாகத்தில் கிதாபுஸ் ஸெளம் எனும் பாடத்தில் 109வது பக்கம் தொடக்கம் 208ம் பக்கம் வரை பிறை தொடர்­பான அவர்­களின் விரி­வான விளக்­கங்­களைக் காணலாம். அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா சபைத் தலை­வரால் பிறை தொடர்பில் இமாம் எடுக்கும் தீர்­மா­னத்­துக்­குத்தான் கட்­டுப்­பட வேண்டும் என்­ப­தற்கு  அவ­ரது பகி­ரங்க உரையில் இப்னு தைமிய்யா அவர்­களின் இஜ்­திஹாத் முடிவே ஆதா­ர­மாகக் காட்­டப்­பட்­டது. அது உண்­மைதான். ஆனால், அதனை தம்­மிடம் கேட்­கப்­பட்ட ஒரு கேள்­விக்­கு­ரிய பதி­லாகச் சொல்லும் இமா­ம­வர்கள், பல இடங்­களில் மிகக் கடு­மை­யான தொனியில் வலி­யு­றுத்­து­கின்ற விட­யம்தான் பிறையைத் தீர்­மா­னிப்­பதில் வானியல் கணிப்­பீ­டுகள் பயன்­ப­டுத்­தப்­படக் கூடாது என்­ப­தாகும்.

ஜம்­இய்­யதுல் உலமா சபைத் தலைவர் அவர்கள் தமது நிலைப்­பாட்­டுக்கு சார்­பாக பதா­வாவை ஆய்வு செய்யும் போது இதனைக் கண்­ணுற்­றி­ருப்­பர்கள் என்­பதில் சந்­தே­க­மில்லை. அதேபோல் சென்ற விடி­வெள்ளி இதழில் தலையா? கிளையா? கட்­டுரை எழு­திய அஷ்ஷைக் ரீ.ஹைதர் அலி ஹலீமி அவர்­களும் இதனை அறிந்­தி­ருப்­பார்கள். இன்ஷா அல்லாஹ் தமது எதிர்­கால செயற்­பா­டு­களில் இவர்கள் அவற்றைக் கவ­னத்திற் கொள்­வார்கள் என நம்­பு­கிறோம்.

பிறையைத் தீர்­மா­னிப்­பதில் பார்வை , கேள்வி ஆகிய புலன்கள் மட்­டுமே பயன்­ப­டுத்­தப்­பட வேண்­டு­மே­யொ­ழிய வானி­லைக்­க­ணிப்­பீடு அல்ல என்­பதை வலி­யு­றுத்தும் இமா­ம­வர்கள் பின்­வ­ரு­மாறு கூறு­கிறார். 

' இரண்டு அடிப்­ப­டைகள் இங்கு கவ­னத்திற் கொள்­ளப்­படல் அவ­சி­ய­மாகும். முத­லா­வது ஹிலால் என்ற பதம் சப்­த­மிட்டுக் கூறுதல் என்ற அடிப்­ப­டை­யி­லி­ருந்து பிறந்­த­தாகும். சப்­த­மி­டுதல் பார்­வை­யாலோ கேள்­வி­யாலோ அடை­யாமல் நடை­பெற முடி­யாது. இரண்­டா­வது அல்லாஹ் அதனை மனி­தர்­க­ளுக்கு நேரக்­க­ணிப்­பீ­டாக ஆக்கி வைத்­துள்ளான். பார்வை,கேள்வி ஆகிய புலன்­களால் அடைந்­தா­லே­யன்றி அது நேரக்­க­ணிப்­பீ­டாக அமை­யாது. இவ்­வாறு அடைதல் என்­பது இல்­லா­விட்டால் நேரக் கணிப்­பீடும் இல்லை. அப்­போது அது பிறை­யா­கவும் அமை­யாது. இந்­த­வ­கையில் பிறையின் உத­யத்தை கணிப்­பீட்டின் மூலம் உறு­திப்­ப­டுத்­து­வது எவ்­வித அடிப்­ப­டை­யு­மற்­றது' (மஜ்­மூஉ பதாவா பாகம்25 பக்:113)

ஸஹீஹுல் புகா­ரி­யி­லுள்ள இப்னு உமர் (ரழி) அவர்கள் அறி­விக்கும் 'நிச்­ச­ய­மாக நாம் எழு­தாத கணிப்­பி­டாத சமூ­க­மாவோம். மாதம் என்­பது இப்­படி இப்­ப­டித்தான். அதா­வது ஒரு­த­டவை இரு­பத்­தொன்­பது இன்­னொரு தடவை முப்­பது' எனும் ஹதீஸை வானிலைக் கணிப்­பீட்­டுக்கு ஆதா­ர­மாகக் கொள்ள முற்­படும் சிலர் எழுத, கணிப்­பிடத்  தெரிந்­த­வர்கள் உரு­வா­கி­விட்டால் அதனை அடிப்­ப­டை­யாகக் கொள்­ளலாம் என்பர். இவ்­வா­தத்தை முற்­றாக மறுக்கும் இமாம் இப்னு தைமிய்யா, நபி­ய­வர்கள் இந்த ஹதீஸைக் கூறும் போது சிக்­க­லான வாரிசுச் சட்­டங்­களைக் கூட கணக்குப் பார்க்கும் அள­வுக்கு திற­மை­யா­ன­வர்­களும் வஹியை எழு­தக்­கூ­டி­ய­வர்­களும் மன்­னர்­க­ளுக்குக் கடிதம் எழுதக் கூடி­ய­வர்­களும் அன்­றி­ருந்­தனர். வானியல் கணிப்­பு­களில் சிறந்­த­வர்­களும் இருந்­தனர்.

அப்­ப­டி­யி­ருந்த போதிலும் கூட நபி­ய­வர்கள் இவ்­வாறு சொன்­ன­தற்குக் கார­ணமே பிறையைத் தீர்­மா­னிப்­பதில் கணிப்­பீடு கூடாது, அது அந்­நி­யர்­களின் வழக்கம், இவ்­வாறு கணிப்­பீடு செய்­ப­வர்கள் முஃமின்­களின் வழி­யல்­லாத வழி­யையே பின்­பற்­றி­ய­வர்­க­ளாவர் என்­பதை உணர்த்­தவும் மேலும் அது அனு­மா­னத்தின் அடிப்­ப­டையில் அமைந்­தது.நாமோ திட்­ட­வட்­ட­மான அடிப்­ப­டையில் கண்ணால் கண்டு தீர்­மா­னிக்­கிறோம் என்­பதை உணர்த்­து­வ­தற்­கு­மா­கத்தான். அத்­தோடு நபி­ய­வர்கள் பிறையைத் தீர்­மா­னிப்­பதில் கணிப்­பீ­டு­களைப் பயன்­ப­டுத்­தாத சிறந்த சமூ­க­மாக நாம் உள்ளோம் என்ற பெரு­மிதத் தொனி­யி­லேயே இவ்­வாறு சொன்­னார்­களே தவிர குறை­கூ­றி­யல்ல என விளக்கும் இமா­ம­வர்கள் தமது இந்தக் கருத்தை நிறுவும் வகையில் இவ்­வா­றான வசனப் போக்கில் அமைந்த வேறு பல ஹதீஸ்­க­ளையும் மொழி­யியல் ரீதி­யி­லான விளக்­கங்­க­ளையும் கொண்­டு­வ­ரு­கிறார்.( விரி­வான விளக்­கத்­துக்கு பார்க்க பதாவா பாகம் 25 பக் 144-174)
இன்­னு­மொரு இடத்தில் இமாம் இப்னு தைமிய்யா இப்­படிச் சொல்­கிறார் : பிறை விட­யத்தில் நட்­சத்­திரக் கணிப்­பீ­டு­களை அடிப்­ப­டை­யாகக் கொள்­வது என்­பது தெளி­வான சுன்­னாவின் அடிப்­ப­டை­யிலும் ஸஹா­பாக்­களின் ஏகோ­பித்த முடிவின் அடிப்­ப­டை­யிலும் கூடாது என்­பதில் சந்­தே­க­மில்லை. ஏனெனில் நபி­ய­வர்கள் இது பற்றிச் சொல்லும் போது நாங்கள் (பிறை விட­யத்தில்) எழு­தாத , கணிக்­காத சமூகம் நீங்கள் பிறை­யைக்­கண்­டுதான் நோன்பைப் பிடி­யுங்கள் பிறை­யைக்­கண்­டுதான் நோன்பை விடுங்கள்...மாதம் என்­பது இரு­பத்­தொன்­ப­துதான். உங்­க­ளுக்கு அன்று பிறை தெரி­யாமல் இருட்டி விட்டால் (முப்­ப­தாகக்) கணித்துக் கொள்­ளுங்கள். ( பக்கம்:166)

பிறை விட­யத்தில் வானிலைக் கணிப்­பீட்டில் தங்­கி­யி­ருப்­பவர் அதன் அடிப்­ப­டையில் பிறை பற்­றிய தீர்­மா­னங்­களை எடுப்­பவர் ஷரீ­இத்தில் வழி கெட்­ட­வ­ராவார். மார்க்­கத்தில் புத­மையை நுழைத்­த­வ­ராவார். அவர் அறி­விலும் கணித்­த­லிலும் தவறு செய்­த­வ­ரா­கிறார்.                                                            (பக்கம் 207)

இவ்­வாறு வானிலைக் கணிப்­பீ­டு­களை வைத்து பிறையைத் தீர்­மா­னிக்க கூடாது ளூ அது ஷரீ­ஆ­வுக்கு முர­ணா­னது என எமது கண்­ணியம் மிக்க இமாம்­கள்கள் இவ்­வ­ளவு தெளி­வாகக்  கூறி­யி­ருக்க எவ்­வாறு எமது பிறைக்­கு­ழ­வினர் ஏக­ம­ன­தாக ஷரீ­ஆ­வுக்கு முர­ணான அந்த விதி­களை நிறை­வேற்­றி­னார்­களோ தெரி­ய­வில்லை. 

நன்றி - விடிவெள்ளி
.
Disqus Comments