Saturday, September 7, 2013

"முஸ்லிம் பெண்கள் அளிக்கும் வாக்குகள் அனைத்தும் முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தாவிற்கும் ஹிஜாபிற்கும் வழங்கும் அங்கீகாரம்" மடவளையில் அஸாத் சாலி


நடை பெறப் போகும் தேர்தலில் முஸ்லிம் பெண்கள் அளிக்கும் வாக்குகள் வெறும் வாக்குகள் அல்ல. அவை அனைத்தும் முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தாவிற்கும் ஹிஜாபிற்கும் வழங்கும் அங்கீகாரம் என்பதை மறந்து விடவேண்டாம் என்று தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் கண்டி மாவட்ட ஐ.தே.க. வேட்பாளருமான ஆஸாத் சாலி தெரிவித்தார்.

(6.9.2013 இரவு)  மடவளை சந்தியில் இடம் பெற்ற மாபெறும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தெரிவித்தார். மடவளை அரசியற் கூட்ட வரலாறு காணாத பெருமளவு பொது மக்கள குழுமி இருந்த இக் கூட்டத்தில் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் அவர் உரையாற்றும் போது மேலும் தெரிவித்ததாவது-

அரசியல் அமைப்பின் 17ம் 18ம் திருத்தங்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு தெரிவித்ததன் மூலம் மகிந்த ராஜபக்ஷ அவர்களை இலங்கையின் ஆயுட்காலத் தலைவராக்கி விட்டது அரசியல் அமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ள மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகள் பாராளுமன்றத்தில் தேவைப் படுகின்ற போது அதனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வழங்கியதன் மூலம் இன்று நாட்டில் நடக்கும் அராஜக நிலைக்கு அவர்கள் துணை போய்விட்டார்கள்.

இலங்கை வரலாற்றின் ஜே.ஆர்ஜயவர்தனா, ஆர்.பஜரேமதாச, சந்திரிக்கா பண்டார நாயக்கா ஆகிய அனைவருமே இரண்டு மட்டுமே ஆடசியில் இருந்தனர். ஆனால் தற்போது ஆயல் முழுவதும் இருக்க முடியும். அதுமட்டுமல்ல அதற்குத் தேவையான அனைத்து பின்னணியையும் அரசியல் அமைப்பின் 17ம். 18ம் திருத்தங்கள் வழங்கியுள்ளன.இதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் துணை போனது.

அது மட்டுமல்ல கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் நிபந்தனை அற்ற வகையில் தமிழ் கூட்டமைப்புடன் சேர்ந்து முதலமைச்சுப் பதவியைப் பெறக் கிடைத்த அரிய வாய்ப்பை தவற விட்டு வரலாற்றுத் தவறையும் அது இழைத்துள்ளது.

தற்போது விழுத்த முடியாது என்று சொல்கின்ற ஆட்சியை ஆட்டம் காண கிழக்கு மாகாண சபையிலிருந்து ஆரம்பித்திருக்க முடியும். இவ்வாறு முஸ்லிம்களுக்கு ஆநீதி இழைத் கட்சியை நம்ப வேண்டாம் என்றார்.

சிலர் கூறுகின்றார்கள் இத்தேர்தல் மூலம் ஆட்சியை மாற்றப் போகின்றீர்களா? என்று. ஆம். அதனையும் செயய முடியும். டி.பி. விஜேதுங்க ஜனாதிபதியாக இருக்கும் போது என்ன நடந்தது. தென் மாகாணம், அதனை அடுத்து மேல் மாகாணம், அதைத் தொடர்ந்து வந்த பாராளுமன்றத் தேர்தல் அதனை அடுத்து ஜனாதிபதித் தேர்தல் என்று சிறிய காலப் பகுதியில் சந்திரிகா அம்மையார் வெற்றி பெறவில்லையா? இது தென் மாகாண சபைத் தேர்தலில் இருந்து ஆரம்பிக்க வில்லையா? அது போல் ஏன் இதனையும் மத்திய, வடமேல், வடக்கு மாகாண சபைத் தேர்தல்களில் இருந்து ஆரம்பிக்க முடியுமே.

தற்போது புதிதாக இரு அங்கத்தவர்கள் மகிந்த ராஜபக்ஷ குடும்பத்திற்கு உள் வாங்கப்பட்டுள்ளனர். ஒருவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர். மற்றவர் பொதுபலசேனாவின் செயலாளர்.

நடை பெறப் போகும் தேர்தலில் முஸ்லிம் பெண்கள் அளிக்கும் வாக்குகள் வெறும் வாக்குகள் அல்ல. அவை அனைத்தும் முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தாவிற்கும் ஹிஜாபிற்கும் வழங்கும் அங்கீகாரம் என்பதை மறந்து விடவேண்டாம்.

கண்டி மாவட்டத்தில் ஒரு இலட்சத்து நாற்பத் திரண்டாயிரம் (142000) முஸ்லிம் வாக்குகள் உள்ளன. இத் தொகையால் மாகாண சபையை மட்டு மல்ல ஜனாதிபதித் தேர்தலையே மாற்றி அமைக்க முடியும். 

நான் பொது பல சேனாவின் செயலாளருமான படகொட அத்தே ஞானசேர தேரருக்கு நன்றி தெரிவிக்கின்றேன். ஏன் தெரியுமா தனித் தனிப் பிரிவாக இருந்த முஸ்லிம் மக்களை ஓரணியில் ஒற்றுமையாக்கியவர் அவர்தான்  எம்மை ஒற்றுமைப் படுத்தமியமைக்கு நன்றி என்றார்.

சிங்கள மக்கள மிகவும் நல்லவர்கள்.அவர்களை நல்ல முறையில் வழி நடத்தி எம்மாலான சகல விடயங்களையும் நியாய மாகச் செய்துள் கொள்ள முடியும். ஆனால் அவர்களை ஒரு சில சக்திகள் இன்று திசை திருப்பபுகின்றன. முஸ்லிம்கள் நோற்ற நோன்பும் எனக்காகக் கேட்ட துவாவும்தான் இன்று ஆஸாத் சாலியை இவ்வளவு தூரம் உயர்தியுள்ளது. உங்களது மேலான பிராத்தனையும் இறைவனின் உதவியும் இருக்கும் வரை நான் மரணித்ததாலும் ஜனாதிபதியிடம் மண்டி இடமாட்டேன் என்றார்.

பாதுகாப்புச் செயலாளர் அண்மையில் தெரிவித்த கருத்து ஒன்றின்படி முஸ்லிம்கள் பயங்கரவாதிகள் என்று தெரிவித்ததிருந்தார். இத்தனை பள்ளிகள் உடைக்கப்பட்டன். பெசன்பக் போன்ற நிறுவனங்கள் தாக்கப்பட்டன. கிரேண்ட்பாஸ் பள்ளி தாக்கப்பட்டது. அவை தொடர்பான இருவெட்டுக்கள் (CD) கொடுக்கப்ட்ட போதும் இதுவரை ஒருவராவது கைது செய்யப்படவில்லை. அப்படியாயின் யார் பயங்கரவாதி? 

கண்டி மாவட்டத்திலுள்ள 142000 முஸ்லிம்வாக்குகளில் 80 முதல் 90 சதம் வீதம் பேர் வாக்களித்தால் நிச்சயம் ஐ.தே.க.யே வெற்றி பெறும். முஸ்லிம்களில் 50 சதவீதமானவர்கள் வாக்களிப்பதில்லை. விசேடமாக பெண்கள் வாக்களிப்தில்லை. இது முஸ்லீம்களது உரிமைக்காக அளிக்கும் வாக்கு என்பதை மறந்து விடாதீர்கள்.

நான் தேர்தலில் வெற்றி பெற்றதும் கொழும்புக்குப் போய் விடுவேன் என்கின்றனர். நான் மாகாண சபையுடன் மட்டுமல்ல பாராளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்று கண்டி மாவட்டத்திலிருந்து பாராளுமன்றம் செல்வேன் என்றார்.

அசாத் சாலியின் ஒருங்கிணைப்பாளர் ஹனிப் அன்வர் ஏற்பாடு செய்த இக்கூட்டம் மற்றும் பொதுமக்கள் சந்திப்பில் மடவலையை சேர்ந்த ஐ.தே.க வேட்பாளர் ஜனாப் மஹ்மூத் மலிக், ஜனாப் முத்தலிப்  மற்றும் சித்ரா மந்திலக்க ஆகியோர் உரை நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது.


Disqus Comments