Friday, October 4, 2013

தென் கிழக்கு பல்கலையின் 53 மாணவர்கள் 8ம் திகதி வரை விளக்க மறியல்

தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தில் நேற்று இடம்பெற்ற கைகலப்பு தொடர்பில் அப்பல்கலையின் 53 மாணவர்களை எதிர்வரும் 8 ஆம் திகதிவரை விளக்கமறியளில் வைக்க சம்மாந்துறை நீதவான் நீதிமன்றின் பதில் நீதவான் ஏ.எம் நஸீர் உத்தரவிட்டுள்ளார்.
 
இந்த 53 மாணவர்களில் 3 மாணவியர்களும் அடங்குகின்றனர்.
 
நேற்றைய தினம் ஒலுவில் வளா­கத்­தி­லி­ருந்து சம்­­மாந்­துறை வளா­கத்­திற்கு வரு­கை தந்த 3 ஆம் வருட மாண­வர்கள் குழு­வி­னர் 2 ஆம் வருட மாணவர்கள் மீது தாக்­குதல் நடத்­தி­யுள்­ள­னர்.
 கைக­லப்பில் 23 மாண­வர்கள் காய­ம­டைந்து வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளனர். காய­ம­டைந்­தோரில் 6 மாண­விகளும் அட­ங்கு­வ­ர்.
 
இத­னை அடுத்து சம்­மாந்­துறை பிரயோக விஞ்ஞான பீடமாணவர்கள்  நேற்று வியா­ழக்­கி­ழமை நண்பகல் 12.00 முதல் 5.00 மணிவரையான  காலப்ப­கு­திக்குள் வளாகத்தை விட்டு வெளியேற வேண்டும்  எனவும் நிருவாகம் பணித்திருந்­த­து.
 
இந் நிலையிலேயே கைகலப்புடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 53 மாணவர்களையும் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
Disqus Comments