Friday, October 4, 2013

ஊடகவியலாளர்களுக்கு சலுகைகக் கடன் வசதிகளைச்செய்து கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை

(ஜமு)ஊடகவியலாளர்களுக்காக கணினி, மோட்டார் சைக்கிள், புகைப்படக்கருவி மற்றும்  பெக்ஸ் இயந்திரம் ஆகியவற்றைக்கொள்வளவு செய்வதற்காக சலுகைகக்கடன் வசதிகளைச்செய்து கொடுக்க வெகுசன ஊடகம் மற்றும் தகவல் அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதுடன் இதற்கான விண்ணப்பங்களையும்
கோரியுள்ளது.

நாட்டின் அபிவிருத்தியினை நோக்காக்கொண்டு விலைமதிப்பற்ற பணியை ஆற்றி வருகின்ற  ஊடகவியலாளர்களின் தோழில் திறன்களையும் தேர்ச்சித்திறன்களையும் மேம்படுத்துவதற்கு உதவுவதே இதன் பிரதான நோக்கமாகும்.

மோட்டார் சைக்கிள் கணினி,லெப்டொப் ,டெஸ்க்டொப் ,ஐபேட் மற்றும் புகைப்படக்கருவி ஆகியவற்றுக்காக தலா 100.000.00 ரூபாவும் பெக்ஸ் இயந்திரம் மற்றும் ஒலிப்பதிவு நாடாக்கொள்வனவிற்காக தலா 15.000ரூபாவும் கடனாக வழங்கப்படவுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட, 03வருடங்களுக்கு குறையாத காலத்தைப்பூர்த்தி செய்த 18-55 வயதிற்குற்பட்ட ,144.000ரூபாவை வருடாந்த வருமானத்தைக்கொண்டவர்கள் இதற்காக விண்ணப்பிக்கலாம்.

தங்களைப்பற்றிய பூரண தகவல்கள் அடங்கிய விண்ணப்பபடிவத்தைப்பூர்த்தி செய்து எதிர்வரும்25ஆம்திகதிக்கு முன்னர்வெகுசன ஊடகம் மற்றும் தகவல் அமைச்சு  இல.163 கிருலப்பனை மாவத்தை பொல்ஹேன்கொட கொழும்பு 05 எனும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Disqus Comments