Tuesday, October 8, 2013

மெலிபன் பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளது

(TM)மலிபன் பால்மாவின் விலை கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து அதிகரிக்கப்பட்டுள்ளதாக மலிபன் பால்மா கம்பனி தெரிவித்துள்ளது. 

இந்த நிலையில், 400 கிராம் மலிபன் பால்மா பைக்கட் ஒன்றின் விலை 70 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள அதேவேளை, ஒரு கிலோகிராம் மலிபன் பால்மா பைக்கட் ஒன்றின் விலை 185 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் மலிபன் பால்மா கம்பனி தெரிவித்துள்ளது.

இதன்படி 400 கிராம் மலிபன் பால்மா பைக்கட் ஒன்றின் புதிய விலை 395 ரூபா ஆகும். அதேவேளை, ஒரு கிலோகிராம் மலிபன் பால்மா பைக்கட் ஒன்றின் புதிய  விலை 995 ரூபா ஆகும்
Disqus Comments