Saturday, October 19, 2013

இலங்கையில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டுக்கு இங்கிலாந்தில் எதிர்ப்பு

இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்துவதற்கு இங்கிலாந்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இலங்கையில் நடைபெற்ற போரில் அப்பாவி பொதுமக்கள் 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர் என்று சர்வதேச மனித உரிமை அமைப்பினர் கூறி வருவதை இலங்கை தொடர்ந்து மறுத்து வருகிறது. மேலும், இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து நடந்து வருவதாக சர்வதேச சமூகம் இலங்கை மீது குற்றம் சுமத்தியுள்ளது.

இந்தியா பிரதமர் மன்மோகன்சிங் அம்மாநாட்டில் கலந்து கொள்ளக்கூடாது என்று தமிழகத்திலிருந்து பிரதமருக்கு கடுமையான நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளது. கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் இலங்கையில் நடைபெறும் மாநாட்டை புறக்கணிக்கப் போவதாக அறிவித்து விட்டார்.  

இந்நிலையில், இலங்கையில் இம்மாநாட்டை நடத்தவே கூடாது என இங்கிலாந்து எம்.பிக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  இங்கிலாந்து பிரதமர், இலங்கைக்கு கடுமையான தகவலுடன் செல்ல இருப்பதாக  கூறியிருந்தார். இங்கிலாந்து இளவரசர் சார்லசும் இலங்கை செல்ல இருப்பதாக அறிவித்துள்ளார்.  இதனால், எம்.பிக்களின் எதிர்ப்பு இங்கிலாந்து அரசுக்கு தர்மசங்கடமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.
Disqus Comments